Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கே வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்பு.... ஏன் இவ்வளவு தாமதம்... ரசிகர்கள் குழப்பம்!

மும்பை: ஹேசல் வுட்டுக்கு மாற்று வீரர் மற்றும் அணியின் துணை கேப்டன் குறித்தும் சி.எஸ்.கே நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல்-ல் கம்பேக் கொடுப்பதற்காக சென்னை அணி தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை அணி முதல் போட்டியாக வரும் ஏப்.10ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதனிடையே அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஹேசல் வுட் திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அவருக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி சுற்றி வருகிறது.

 ஹேசல் வுட் விளக்கம்

ஹேசல் வுட் விளக்கம்

இதுகுறித்து பேசிய ஹேசல் வுட், நான் கிட்டத்தட்ட 10 மாதங்களாக வெவ்வேறு நேரங்களில் பயோ பபுள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறேன். எனவே கிரிக்கெட்டில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த 2 மாதம் ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அடுத்து வரும் முக்கிய தொடர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார் ஆக போகிறேன் என தெரிவித்துள்ளர்.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஹேசல் வுட்டுக்கு மாற்று வீரர் தேர்வு செய்தது குறித்து நாங்கள் தற்போது முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது தற்போது முக்கியம் இல்லை. சி.எஸ்.கே தற்போதும் சிறந்த அணியாக உள்ளது. எனவே மாற்று வீரர் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

அதே போல சி.எஸ்.கே அணிக்கு துணைக் கேப்டன் யாரும் இல்லை என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சி.எஸ்.கேவுக்கு துணை கேப்டனை நியமிப்பதும் தற்போது பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து அணி நிர்வாகம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார். ரெய்னா இந்தாண்டு அணிக்கு திரும்பியுள்ள நிலையிலும், அணிக்கு எனவே முதல் சில போட்டிகளில் துணை கேப்டன் இருக்க மாட்டார் என தெரிகிறது.

 வெற்றி கட்டாயம்

வெற்றி கட்டாயம்

இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி கடந்த ஆண்டு படு மோசமாக விளையாடியது. குறிப்பாக ப்ளே ஆஃப்-க்கு கூட நுழைய முடியவில்லை. எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என தோனி தலைமையில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, April 6, 2021, 16:05 [IST]
Other articles published on Apr 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+