Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓவருக்குள் 400 பிரச்னை..சிஎஸ்கே அணி தோற்றுவிடுமா?.. அனைத்து வீரர்களும் ஏமாற்றினர்.. சோகத்தில் தோனி

அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவுக்கு தொடகத்திலேயே பல்வேறு துரதிஷ்டங்கள் நிகழ்ந்துள்ளதால் தோனி கடுப்பாகியுள்ளார்.

சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் 38வது லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக முனைப்பு காட்டி வருகின்றன.

டாஸ் மிக முக்கியம்

டாஸ் மிக முக்கியம்

கடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல நம்பிக்கையுடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு இந்த போட்டியில் தொடக்கமே ஏமாற்றங்களே கிடைத்து வருகின்றன. அபுதாபி மைதானத்தை பொறுத்தவரையில் டாஸ் மிக முக்கியமானது. ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் டாஸிலேயே சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து அதிக ஸ்கோர் அடிக்க திட்டமிட்டது.

முதல் ஓவர்

முதல் ஓவர்

டாஸில் தோல்வியடைந்தால் என்ன, பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி இருந்தது. தீபக் சஹார் வீசிய அந்த ஓவரில் சுப்மன் கில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை சிதறவிட்ட நிலையில் 5வது பந்தில் எல்பிடபள்யூ ஆனார். இதற்கு கள நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் சுப்மன் கில் அதற்கு 3வது நடுவரின் ரிவ்யூவ் கேட்க, அதில் நாட் அவுட் என முடிவு வந்தது.

2வது உயிர்

2வது உயிர்

பின்னர் ஆட்டத்தின் 3வது ஓவரில் பெரும் ஏமாற்றம் கிடைத்தது. தீபக் சஹார் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தை வெங்கடேஷ் ஐயர் தூக்கி அடிக்க முயன்றார். பிட்ச்-க்கு அருகிலேயே மிகவும் அழகாக வந்த கேட்ச்-ஐ, டூப்ளசிஸ் தவறவிட்டார். ஃபீல்டிங்கிற்கு புகழ்பெற்ற டூப்ளசிஸ் கேட்ச்-ஐ தவறவிட்டது மற்றொரு கேகேஆர் அணிக்கு ரன் உயர்த்த காரணமாக அமைந்தது.

சிங்கிள் பவுண்டரியானது

சிங்கிள் பவுண்டரியானது

அதன் பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தில் கூட வெங்கடேஷ் ஐயர் பவுண்டரிக்கு பந்தை விரட்டினார். அப்போது ஃபீல்டருக்கு அருகில் எளிமையாக வந்த பந்தை ஹாசல்வுட் டைவ் அடித்து தடுக்க முயன்றார். இதனால் சுலபமாக தடுத்து நிறுத்தி சிங்கில் மட்டுமே போக வேண்டிய பந்து தேவையின்றி பவுண்டரிக்கு சென்றது.

கடைசி கண்டம்

கடைசி கண்டம்

சிஎஸ்கேவுக்கு இந்த கண்டங்கள் மட்டுமே போதும் என ரசிகர்கள் பெரு மூச்சு விட்ட அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. சாம் கரண் வீசிய 4வது ஓவரின் 5வது பந்தை ராகுல் திரிபாதி கீப்பரின் தலைக்கு மேல் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் அது தோனியிடம் கேட்ச்-ஆனது. நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் அவருக்கு இரண்டாவது உயிர் கிடைத்தது. ஏனென்றால் அந்த ஓவரில் ஏற்கனவே சாம் கரண் ஒரு ஷார்ட் பால் போட்டிருந்தார். ஒரு ஓவரில் ஒரு ஷார்ட் பாலுக்கு மேல் போட்டால் நோ பால் கொடுக்கப்படும். எனவே அதில் திரிபாதி சிக்ஸர் பறக்கவிட்டார். தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்து வரும் சிஎஸ்கே மீண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Story first published: Sunday, September 26, 2021, 16:45 [IST]
Other articles published on Sep 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+