Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியே அனுப்பிய கோலி.. குறி வைக்கும் தோனி.. சிஎஸ்கேவில் அறிமுகம் ஆன அதே வீரர்!!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் யாரை வாங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சிஎஸ்கே அணியில் நல்ல ஆல்-ரவுண்டர் இல்லை, ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் மட்டுமே தற்போது இருக்கும் ஆல்-ரவுண்டர்கள்.

அவர்களுக்கு அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுவித்த வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி வாங்கும் என ஒரு தகவல் வலம் வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல் அரங்கில் ஒரு வேடிக்கையான விஷயம் ஒவ்வொரு ஆண்டும் பேசப்படும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுவிக்கும் வீரர், வேறு ஒரு அணியில் இணைந்து சிறப்பாக செயல்படுவார். இந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்-ஐ விடுவித்துள்ளது அந்த அணி.

கிறிஸ் மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்

2020 ஐபிஎல் தொடரில் கிறிஸ் மோரிஸ் பேட்டிங்கில் பெரிய அளவில் அணிக்கு கை கொடுக்கவில்லை. ஆனால், அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும், அவர் காயத்தால் பல போட்டிகளில் ஆடவில்லை. அவரை இந்த ஆண்டு விடுவித்து இருக்கிறது பெங்களூர் அணி.

அறிமுகம்

அறிமுகம்

அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. கிறிஸ் மோரிஸ், 2013 ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சிஎஸ்கே அணியில் தான் அறிமுகம் ஆனார். சிஎஸ்கே அணிக்கும் இப்போது ஆல்-ரவுண்டர் தேவை என்பதால் அவரை வாங்க வாய்ப்பு அதிகம்.

சிஎஸ்கே என்ன செய்யும்?

சிஎஸ்கே என்ன செய்யும்?

சிஎஸ்கே அணி இந்த சீசனில் பல புதிய வீரர்கள் அணியில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியிடம் சுமார் 19 கோடி கையிருப்பு உள்ளது. அந்த தொகையை வைத்து இளம் வீரர்களையும், அனுபவ வீரர்களையும் அந்த நை ஏலத்தில் தேர்வு செய்யும்.

Story first published: Saturday, January 30, 2021, 17:09 [IST]
Other articles published on Jan 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+