Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பணம் தான் முக்கியம்.. 8 வீரர்களை வீட்டுக்கு அனுப்பும் சிஎஸ்கே.. அதிர வைக்கும் தகவல்!

சென்னை : 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

வீரர்களை ஏலத்தில் எடுக்க மற்ற ஐபிஎல் அணிகளிடம் கோடிக்கணக்கில் பணம் கையில் உள்ளது.

ஆனால், சிஎஸ்கே அணியிடம் 15 லட்சம் மட்டுமே உள்ளது. எனவே, இளம் வீரர்களை அதிக அளவில் வாங்க முடிவு செய்துள்ள சிஎஸ்கே குறைந்தது 7 - 8 அனுபவ வீரர்களை வெளியேற்றும் என கூறப்படுகிறது.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

ஐபிஎல் அணிகளில் வீரர்களை தொடர்ந்து தக்க வைத்து விசுவாசம் காட்டும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த அணி 2020 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

மெகா ஏலம் இல்லை

மெகா ஏலம் இல்லை

2021 ஐபிஎல் தொடரில் அணியை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிஎஸ்கே. இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் நடக்கும் என எதிர்பார்த்த சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றம் அளித்தது பிசிசிஐயின் முடிவு. இந்த சீசனில் மினி ஐபிஎல் ஏலம் மட்டுமே நடைபெற உள்ளது.

சிக்கல்

சிக்கல்

மினி ஐபிஎல் ஏலம் மட்டுமே நடைபெறும் என்பதால் கடந்த ஆண்டு வீரர்களை வாங்க அனு

மதிக்கப்பட்ட தொகையில் எவ்வளவு மீதம் உள்ளதோ அதை மட்டுமே வைத்து ஏலத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன ஐபிஎல் அணிகள்.

ஒருவரை கூட வாங்க முடியாது

ஒருவரை கூட வாங்க முடியாது

ஒரு வீரரின் குறைந்தபட்ச அடிப்படை தொகையே 20 லட்சம் ஆகும். இந்த நிலையில், சிஎஸ்கே அணி 15 லட்சம் மட்டுமே வைத்துக் கொண்டு ஏலத்தில் பங்கு பெறவே முடியாது. எனவே, பல அனுபவ வீரர்களை வெளியேற்றி, அதன் மூலம் வீரர்களை வாங்க கூடுதல் தொகையை பெற சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

7.8 கோடி சம்பளம் வாங்கும் கேதார் ஜாதவ்வை நீக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், இம்ரான் தாஹிர் (1 கோடி), பியுஷ் சாவ்லா (6.75 கோடி), ஹேசல்வுட் (2 கோடி), கரன் சர்மா (5 கோடி), ஹர்பஜன் சிங் (2 கோடி), முரளி விஜய் (2 கோடி) ஆகியோரை சிஎஸ்கே அணி நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்

மேலும், ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளதால் 4 கோடி கூடுதலாக கிடைக்கும். மேலும், பிராவோ ஐபிஎல் ஏலத்துக்கு முன் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றால் அவரையும் நீக்க உள்ளது சிஎஸ்கே. அவரது சம்பளம் 6.4 கோடி ஆகும்.

ரெய்னா

ரெய்னா

மேலே கூறப்பட்ட வீரர்களை நீக்கினால் மொத்தமாக 37 கோடி சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும். அதன் மூலம் பல நட்சத்திர வீரர்களை, இளம் வீரர்களை சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடியும். சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே தக்க வைக்குமா? என்பது தான் இப்போது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

ஏலத்தை கலக்கப் போகும் சிஎஸ்கே

ஏலத்தை கலக்கப் போகும் சிஎஸ்கே

ஒருவேளை அவரையும் சிஎஸ்கே நீக்கினால் 48 கோடி கையிருப்பில் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால் ஐபிஎல் ஏலத்தை சிஎஸ்கே அணி கலக்கும். ஆனால், தோனி என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்தே இது அமையும்.

Story first published: Saturday, January 9, 2021, 18:32 [IST]
Other articles published on Jan 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+