For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த இளம்வீரர்.. முதல் போட்டிலயா இப்படி செய்யுறது., சிக்கலில் அணி

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் நம்பிக்கையை உடைத்துள்ளார் இளம் வீரர் ஒருவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாற்றம் ஏற்பட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் மோசமான தோல்வியை சந்தித்து ப்ளே ஆஃப்-க்கு கூட செல்லாமல் வெளியேறியது. இதனால் இந்த முறை அணி தேர்வில் தோனி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் ஓப்பனிங்கிற்கு அனுபவ வீரர்கள் ரெய்னா - மொயின் அலி களமிறங்கினால் நன்றாக இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் தோனி கடந்தாண்டை போல இளம் வீரர் ருத்ராஜ் கெயிக்வாட்டிற்கு ஓப்பனிங்கில் நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

பெரிய சொதப்பல்

பெரிய சொதப்பல்

இதனால் தோனியியே நம்பி அனுப்பியுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் பெரும் அதிர்ச்சி கிடைத்தது. ஆட்டத்தின் 3வது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் புஷ் சாட்டால் தடுக்க முயன்றார். அப்போது பந்து ஸ்லிப் திசையில் நின்றிருந்த தவானிடம் கேட்ச்சானது. 8 பந்துகளை சந்தித்த ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். இதே போல மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

கடந்த ஆண்டு சி.எஸ்.கே மோசமாக ஆடினாலும், ருத்ராஜ் கெயிக் வாட் மட்டும்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதல் 3 போட்டிகளிலும் அவர் சொதப்பிய போதும் தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அடுத்த 3 போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 65*, 70, 62* ரன்களை எடுத்து அசத்தினார். மொத்தம் 6 போட்டிகளில் ஆடிய அவர் 204 ரன்களை எடுத்தார்.

நம்புவாரா தோனி

நம்புவாரா தோனி

எனவே இந்த ஆண்டும் ருத்ராக் கெயிக்வாட் முதல் போடியில் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தன்னை தயார்படுத்திக்கொண்டு சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனி கடந்தாண்டை போலவே மீண்டு ருத்ராஜுக்கு வாய்ப்பு தருவாரா என்ற கேள்வியும் ஒரு புறம் உள்ளது.

Story first published: Saturday, April 10, 2021, 20:24 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
CSK Opener Ruturaj Gaikwad breaks a Dhoni's faith on him in match against Delhi capitals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+