Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சிஎஸ்கே தோல்வி உறுதி?”.. 2 முக்கிய விஷயங்களால் தவிக்கும் தோனி.. அப்படி என்ன ஆனது?

அமீரகம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டியில் தோனிக்கு மிகப்பெரும் தலைவலி ஏற்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 2ம்கட்ட ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ள சூழலில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சிஎஸ்கே - டெல்லி

சிஎஸ்கே - டெல்லி

இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த டெல்லி - சென்னை அணிகள் நாளை நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையர் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை தான் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்த சிஎஸ்கே, தகுதிப்பெற்ற பின்னர் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

மோசமான நிலை

மோசமான நிலை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசம், டெல்லி அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசம், ராஜஸ்தானுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசம் என மோசமான தோல்விகளை சந்தித்தது. இந்த 3 தோல்விகளுக்கும் மிகப்பெரிய காரனம் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரின் சொதப்பல்களே ஆகும். அதனை சரிசெய்வதற்காக தான் தோனி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

இந்நிலையில் சிஎஸ்கே ஃபார்முக்கு திரும்பினாலும் டெல்லியை எதிர்கொள்வதில் பெரும் பிரச்னை உருவாகியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளில், ஒன்றில் கூட சென்னை அணி வெற்றி பெறவில்லை. கடந்தாண்டும் சரி, இந்தாண்டு சரி, அனைத்து லீக் போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. எனினும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் டெல்லியுடன் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ள சிஎஸ்கே 15 வெற்றிகள் பெற்றுள்ளது.

பிட்ச்-லும் சிக்கல்

பிட்ச்-லும் சிக்கல்

சென்னை வெற்றி பெற நினைத்தாலும், போட்டி நடைபெறும் துபாய் மைதானமும் சென்னைக்கு எதிராகவே உள்ளது. அந்த அணிக்கு அதிர்ஷ்டமே இல்லாத பிட்ச் என்றால் துபாய் தான். அந்த மைதானத்தில் சென்னை மிக மோசமாக அடி வாங்கியிருக்கிறது. இந்த இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில், துபாயில் விளையாடிய போட்டிகளில், சென்னை ஒரேயொரு போட்டியில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக முன்னணி வீரர்களே இங்கு ரன் குவிக்கவில்லை. இதனால் இதிலும் தோனி கவனம் செல்லத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Story first published: Saturday, October 9, 2021, 20:57 [IST]
Other articles published on Oct 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+