For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. அணியின் முக்கிய வீரர் விலகல்.... அடுத்தடுத்து பின்னடைவு!

மும்பை: ஐபிஎல் நெருங்கி வரும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில், ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் சென்னை அணி முக்கிய பவுலரை தற்போது இழந்துள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

ஐபிஎல்-ல் மிகப்பெரும் சக்திக்கொண்ட அணியாக பார்க்கப்பட்ட சி.எஸ்.கே கடந்த ஆண்டு ப்ளே ஆப்-க்கு கூட செல்லாமல் மோசமாக வெளியேறியது. இதனால் இந்த ஆண்டும் மிகப்பெரும் கம்பேக் கொடுக்க கடந்த மார்ச்9ம் தேதி முதலே தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் சென்னை அணியின் முக்கிய பவுலர் ஹாசல் வுட் தொடரில் இருந்து விலகியிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏன்?

ஏன்?

இதுகுறித்து பேசியுள்ள ஹாசல்வுட், நான் கிட்டத்தட்ட 10 மாதங்களாக வெவ்வேறு நேரங்களில் பயோ பபுள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறேன். எனவே கிரிக்கெட்டில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த 2 மாதம் ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளர்.

அடுத்தடுத்த போட்டிகள்

அடுத்தடுத்த போட்டிகள்

தொடர்ந்து பேசிய அவர், வரும் நாட்களில் மிகப்பெரும் போட்டிகள் உள்ளன. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மிக நீண்டதாக இருக்கும், பங்களாதேஷுக்கு எதிரான டி 20 தொடரும் இந்த ஆண்டின் இறுதியில் உள்ளது. பின்னர் டி 20 உலகக் கோப்பையும் ஆஷஸ் தொடரும், அடுத்த 12 மாதங்கள் மிகப் பெரியதாக இருக்கும். எனவே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் தயாராக வேண்டும். அதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மாற்றம்

மாற்றம்

ஆஸ்திரேலிய வீரரான ஹாசல் வுட், கடந்த 2020ம் ஆண்டுதான் ஐபிஎல்-ல் அறிமுகமானார். சென்னை அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தார். இந்நிலையில் இந்த சீசனில் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர், சாம் கரண், தீபக் சஹார், பிராவோ, லுங்கி நெகிடி ஆகியோர் பவுலிங்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 1, 2021, 15:31 [IST]
Other articles published on Apr 1, 2021
English summary
CSK's Important pacer pulls out of the IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+