Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரருக்கு வாய்ப்பு.. சிஎஸ்கே அணிக்கு கிடைத்த புத்துணர்ச்சி.. ப்ளே ஆஃப்-கான ப்ளேயிங் 11 ரெடி!

அமீரகம்: முதல் குவாலிஃபையர் போட்டிக்கான சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது ப்ளே ஆஃப் சுற்று மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா, ஆர்சிபி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுகளில் மோதவுள்ளது.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. சிஎஸ்கே அணி ஏற்கனவே தொடர்ந்து 3 தோல்விகளை பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிராகவும் தொடர்ந்து 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. எனவே இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்களுடன் ப்ளேயிங் 11 உருவாக்கப்படவுள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஓப்பனிங்கை பொறுத்தவரை சிஎஸ்கே அணியில் மிக பலமாக உள்ளது. டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். ஆனால் மிடில் ஆர்டரில் தான் பிரச்னையே உள்ளது. சுரேஷ் ரெய்னாவின் இடத்திற்கு தான் சிக்கல் நிலவுகிறது. சுரேஷ் ரெய்னா ஃபார்ம் அவுட்டாக இருப்பதால் அவருக்கு பதிலாக கடந்த 2 போட்டிகளில் ராபின் உத்தப்பா களமிறக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவரும் பெரியளவில் சோபிக்கவில்லை. கடந்த 2 போட்டிகளில் 21 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

 தமிழக வீரருக்கு வாய்ப்பு

தமிழக வீரருக்கு வாய்ப்பு

எனினும் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பார் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ரெய்னாவின் இடத்திற்கு தமிழக வீரர் ஜெகதீசனை களமிறக்க தோனி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே சிஎஸ்கேவுக்காக ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். ஒருவேளை உத்தப்பா சொதப்பினாலும், அம்பத்தி ராயுடு பல்வேறு சமயங்களில் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவி வருகிறார். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை பிராவோ மற்றும் ஜடேஜா தொடர்ந்து செயல்படவுள்ளனர்.

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சை பொறுத்தவரையில் தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தோனியின் முதன்மை தேர்வாக உள்ளனர். ஆனால் ஹாசல்வுட் விவகாரத்தில் தான் தோனி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. எனவே ஹாசல்வுட்டிற்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் ஃபெகண்டோர்ஃபை பயன்படுத்த தோனி திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே மும்பை அணிகாக சிறப்பாக செயல்பட்டுள்ளதால் ப்ளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கேவுக்கு உதவுவார் எனத் தெரிகிறது.

சிஎஸ்கே ப்ளேயிங் 11

சிஎஸ்கே ப்ளேயிங் 11

ருதுராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், மொயீன் அலி, உத்தப்பா/ ஜெகதீசன், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், பெகண்ட்ரூஃப்

Story first published: Saturday, October 9, 2021, 21:01 [IST]
Other articles published on Oct 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+