Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒற்றை வார்த்தைக்காக இப்படி ஒரு கம்பேக்கா.. தோனியால் சபதம் எடுத்த சிஎஸ்கே வீரர்கள்.. ஓய்வறை ரகசியம்!

அமீரகம்: தோனி சொன்ன ஒற்றை வார்த்தைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சபதம் ஏற்று கம்பேக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த புள்ளிப்பட்டியலில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர் விமர்சனங்கள்

தொடர் விமர்சனங்கள்

கடந்தாண்டு சிஎஸ்கே அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப்பெற முடியவில்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். வயதானவர்களின் அணி, தோனி இனி சரிபட்டு வரமாட்டார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கேற்றார் போலவே தோனியும் பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பினார்.

அசத்தல் கம்பேக்

அசத்தல் கம்பேக்

ஆனால் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்காத வகையில் அசுரத்தனமான கம்பேக்கை சிஎஸ்கே கொடுத்துள்ளது. முதல் போட்டி முதல் தற்போதுவரை வெற்றிகளை வாரி குவித்து வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளும் சரியாகிவிட்டன. தோனியின் அதிரடி ஆட்டமும் திரும்ப வந்துவிட்டது.எனவே இந்த முறை கோப்பை உறுதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

Recommended Video

Maxwell-ஐ சீண்டிய Ashwin.. கோபத்துடன் திட்டிய Dhoni.. Sehwag சொன்ன தகவல்
கம்பேக்கிற்கான காரணம்

கம்பேக்கிற்கான காரணம்

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களின் இந்த மிகப்பெரும் கம்பேக்கிற்கு தோனியின் ஒரே ஒரு வார்த்தை தான் இருந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், இந்தாண்டு தொடக்கத்தில், வீரர்களிடம் ஆலோசனை நடத்திய தோனி, எதுகுறித்தும் கவலைப்படாதீர்கள், ஒரே ஒரு சீசன் தான் மோசமாக அமைந்தது, அனைத்துவிதமான விளையாட்டிலும் இது நடைபெறும் என்றார்.

தோனி மிக மகிழ்ச்சி

தோனி மிக மகிழ்ச்சி

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறித்து பேசிய தோனி, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் மிகவும் பலமான கம்பேக் கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். எப்போதும் ஒரு அணி வெற்றி பெற முடியாது. அதே போன்று தான் கடைசி சீசனில் எங்களுக்கு மோசமாக இருந்தது. அதற்கான கம்பேக்கை இந்தாண்டே கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறினார்.

என்னென்ன மாற்றங்கள்

என்னென்ன மாற்றங்கள்

சிஎஸ்கே அணி இந்தாண்டு நல்ல கம்பேக் கொடுத்ததற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. அணியில் பெரியளவில் தோனி மாற்றம் ஏற்படுத்தவில்லை. முதல் இரண்டு ஆட்டங்கள் ருத்ராஜ் சொதப்பினார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததால் தான் தற்போது 407 ரன்களுடன் அதிக ரன் அடித்த வீரராக உள்ளார். மொயீன் அலியை சரியாக பயன்படுத்தி 3வது இடத்திற்கு பொருத்தினார் தோனி. இதே போல ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடுவின் கம்பேக் சிறப்பாக இருந்துள்ளது.

Story first published: Saturday, October 2, 2021, 15:10 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+