Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இப்படியும் செய்வார்களா”... சிறுவர்களால் மனம்கலங்கி தோனி.. திடீர் சர்ஃபரைஸால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அமீரகம்: டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சிறுவர்களுகாக தோனி செய்த விஷயம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் நேற்று சிஎஸ்கே - டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தோனியின் கம்பேக்

தோனியின் கம்பேக்

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் உதவியவர் எம்.எஸ்.தோனி. கடைசி 11 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனிதான் இருந்தார். இந்த சீசன் முழுவதும் சொதப்பியிருந்த தோனி, திடீரென 3 பவுண்டரிகளை விளாசி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் விண்டேஜ் தோனியை மீண்டும் பார்த்த ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

கவனம் ஈர்த்த சிறுவர்கள்

கவனம் ஈர்த்த சிறுவர்கள்

இந்நிலையில் தோனியின் இரண்டு குட்டீஸ் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நேற்றைய போட்டியில் தோனி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, குட்டி அண்ணன் மற்றும் தங்கை இருவர் கடவுளிடம் பிரார்த்தனை மேற்கொண்டனர். தோனி வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருந்ததை போட்டியின் இடையே பெரிய திரையில் காண்பித்தார்கள். இதனை ஆட்டத்தின் போதே தோனி கவனித்தார்.

ரசிகர்கள் திகைப்பு

ரசிகர்கள் திகைப்பு

இறுதியில் தோனி பவுண்டரி அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தவுடன் இரண்டு குழந்தைகளும் கண்களிக் கண்ணீர் வடிய ஆனந்தத்தில் அழுதுத் தீர்த்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இந்த கால சிறுவர், சிறுமிகளும் தோனியின் மீது காதல் வைத்துள்ளனர் என்பதை பார்த்து அனைவரும் திகைத்துப்போனார்கள். தோனியும் திகைத்துப்போனார் என்றே கூறலாம்.

தோனியின் சர்ஃபரைஸ்

தோனியின் சர்ஃபரைஸ்

இதனால் ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பிய தோனி, சிறுவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு கீழே சென்று கையை உயர்த்தி உற்சாகப்படுத்தினார். மேலும் அவர்களுக்கு சர்ஃபரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்தார். தனது கையில் இருந்த மேட்ச் பந்தில் கையெழுத்து போட்டு, அதனை சிறுவர்களிடம் தூக்கி போட்டார் தோனி. அவரின் இந்த செயலால் அந்த குட்டீஸ் நெகிழ்ந்த புகைப்படங்கள் வைராகி வருகிறது.

Story first published: Monday, October 11, 2021, 19:09 [IST]
Other articles published on Oct 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+