Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC: "BP மாத்திரை வாங்கியே ஆகனும்" கடைசி ஓவர் வெற்றி தான் இன்றும்.. பிசிசிஐ-ன் குசும்புத்தனம்!

அமீரகம்: சென்னை அணி விளையாடும் முதல் குவாலிஃபையர் போட்டி க்ளோஸ் வின்னிங் மேட்சாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம் என்பதால் கடும் முனைப்புடன் இரு அணிகளும் களம் இறங்குகின்றன.

சொதப்பும் அணிகள்

சொதப்பும் அணிகள்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுமே மிகப்பெரும் பலத்துடன் விளையாடி வருகின்றன. எனினும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்த பிறகு அவற்றின் செயல்பாடுகள் சற்று மோசமாக உள்ளன. சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற பின் விளையாடி 3 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்விகளை தழுவியுள்ளது. இது ஒருபுறம் இருக்க டெல்லி அணி விளையாடிய கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ப்ளே ஆஃப்-க்கு வந்துள்ளது. எனவே இது இரு அணிகளுக்குமே கம்பேக் கொடுக்க வேண்டிய போட்டியாகும்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இரு அணிகளிலுமே சரிசமமாக இருந்தாலும், நிச்சயம் கடைசி ஓவர் வரை செல்லக்கூடிய க்ளோஸ் வின்னிங் மேட்ச்சாக தான் இது மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி துபாயில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தின் பிட்ச்சானது மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு பிரிவுகளுக்குமே நல்ல ஒத்துழைப்பை தருகிறது. குறிப்பாக பந்துவீச்சில் ஸ்பின்னர்களை விட வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கு அதிக விக்கெட்டுகள் எடுக்கலாம்.

வெற்றி சராசரி

வெற்றி சராசரி

பேட்டிங், பவுலிங் என இரண்டுமே எடுபடும் என்பதால் இந்தாண்டு இந்த மைதானத்தில் பெரியளவில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வரவில்லை. சராசரியாக இங்கு 130 -140 ரன்கள் தான் இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தான் தேர்வு செய்கிறது. இதனால் எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டிவிட்டு, பிரஷர் இன்றி இலக்கை துரத்த முற்படுகின்றன. அந்தவகையில் இந்த மைதானத்தில் இதுவரை 2வதாக விளையாடிய அணிகள் தான் 80 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியிலும் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்யும்.

கடைசி ஓவரில் தான் வெற்றி

கடைசி ஓவரில் தான் வெற்றி

ஆனால் டாஸ் வெல்லும் அணி இன்று சுலபமாக வெல்ல முடியாது. சென்னை மற்றும் டெல்லி என இரு அணிகளுமே சிறப்பான பந்துவீச்சு படையை வைத்துள்ளன. இந்த சீசனில் இரு அணிகளுமே 130 - 140 என்ற இலக்குகளை டிபண்ட் செய்து அசால்ட்டாக வெற்றி பெற்றுள்ளன. எனினும் அந்த ஆட்டங்கள் கடைசி ஓவர் வரை இழுக்கப்பட்டு பரபரப்புடன் வெற்றி கண்டுள்ளன. டெல்லி - ஆர்சிபி அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் கூட கடைசி பந்தில் வெற்றி பெற்ற போட்டிதான். இந்த போட்டியும் துபாயில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிஎஸ்கே ரசிகர்கள் மாத்திரையை வாங்கிக்கொள்ள வேண்டும் என மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, October 10, 2021, 15:50 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+