Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 முடிச்சா 150ம்... இன்னிக்கு போட்டிக்காக காத்திருக்காரு தல... வீ ஆர் ஆல்சோ வெயிட்டிங் சார்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரோட இன்றைய 8வது நாள் போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Recommended Video

Natarajanக்கு Contract கொடுக்காத BCCI! A+ Gradeல் Kohli, Rohit, Bumrah | OneIndia Tamil

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

இதனிடைய கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தனது வெற்றியை தொடர தீவிரம் காட்டி வருகிறது

8வது போட்டி

8வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 8வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோதிய சிஎஸ்கே தோல்வியுடன் தொடரை துவக்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

வெற்றியை தொடர பஞ்சாப் தீவிரம்

வெற்றியை தொடர பஞ்சாப் தீவிரம்

இதனிடையே கடந்த போட்டியில் சிறப்பான வெற்றி பெற்று தொடரை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடரை துவக்கியுள்ளது. அந்த வெற்றியை தொடரவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரெய்னா வெயிட்டிங்

ரெய்னா வெயிட்டிங்

இன்றைய போட்டியில் சில சாதனைகளுக்கு இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் காத்திருக்கின்றனர். ஐபிஎல்லில் 200 சிக்ஸ்களை எட்டிப்பிடிக்க சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு இன்னும் 2 சிக்ஸ்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அவர் ஏற்கனவே ஐபிஎல்லில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல் காத்திருப்பு

கேஎல் ராகுல் காத்திருப்பு

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் டி20 வடிவத்தில் 5,000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 67 ரன்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அதை அவர் இன்றைய போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் சாதனையை பூர்த்தி செய்ய ஷர்துல் தாக்கூருக்கு இன்னும் 2 விக்கெட்டுகளே மீதமுள்ளது.

2 விக்கெட்டுக்காக காத்திருக்கும் தோனி

2 விக்கெட்டுக்காக காத்திருக்கும் தோனி

சிஎஸ்கே கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி ஐபில்லில் 150 அவுட்களை பூர்த்தி செய்ய இன்னும் 2 அவுட்களே மீதமுள்ளன. அவர் விக்கெட் கீப்பராக 109 கேட்ச்கள் மற்றும் 39 ஸ்டம்பிங்குகளை இதுவரை செய்துள்ள நிலையில், இந்த சாதனையை அவர் இன்றைய போட்டியில் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, April 16, 2021, 11:31 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+