
ஏலம்
ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பும் வீரர்களை வாங்க ஏலம் நடைபெறும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மெகா ஏலத்தில் மட்டுமே ஐபிஎல் அணிகள் சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக்க் கொண்டு பெரும்பாலான வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

தொகை
மெகா ஏலம் அல்லாத மினி ஏலத்தில் சில வீரர்களை மட்டுமே ஐபிஎல் அணிகள் வாங்க முடியும். அதற்கு வீரர்களை வாங்க ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ஒவ்வொரு அணியிடம் மீதமுள்ள தொகையுடன், சிறிய அளவில் தொகையை சேர்த்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளிக்கும்.

எதுவும் கிடையாது
கடந்த ஆண்டு மூன்று கோடி கூடுதலாக ஏலத்தில் எடுக்க பயன்படுத்தலாம் என பிசிசிஐ கூறி இருந்தது. ஆனால், 2021 ஐபிஎல் ஏலத்தில் கூடுதல் தொகை எதுவும் செலவு செய்ய பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை. அப்படி என்றால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மொத்த தொகையில் மீதமுள்ள தொகையில் தான் அணிகள் வீரர்களை வாங்க முடியும்.

15 லட்ச ரூபாய்
அந்த வகையில் சிஎஸ்கே அணியிடம் தற்போது 15 லட்ச ரூபாய் மட்டுமே உள்ளது. எனவே, அந்த அணி சிக்கலில் ஆழ்ந்துள்ளது. சிஎஸ்கே அணி இந்த சிக்கலை சமாளிக்க கேதார் ஜாதவ் மற்றும் பியுஷ் சாவ்லாவை சிஎஸ்கே விடுவிக்கும் என கூறப்படுகிறது.

வாய்ப்பு
மேலும், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்கையும் விடுவித்தால் சிஎஸ்கே அணிக்கும் பல கொடிகள் கையில் இருக்கும். அந்த தொகையை வைத்து இளம் வீரர்கள் பலரை வாங்க முடியும். அதுவே சிஎஸ்கே அணிக்கு இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு.


Click it and Unblock the Notifications











