Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘அடப்போங்கடா’.. நொந்துப்போன சஞ்சு சாம்சன்.. புள்ளிப்பட்டியலில் மீண்டும் டெல்லி முதலிடம்!

அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் டெல்லி அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான அணி பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பாக விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சியளித்தார். கடந்த போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கார்த்தி தியாகி தான் வீசிய முதல் ஓவரிலேயே போல்ட் அவுட் எடுத்தார். இதே போல மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷாவும் 10 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் டெல்லி அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

 பண்ட்-ன் பார்ட்னர்ஷிப்

பண்ட்-ன் பார்ட்னர்ஷிப்

இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் 32 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தார். அதே போல ரிஷப் பண்ட் 24 ரன்களை சேர்க்க டெல்லி அணி 3வது விக்கெட்டிற்கு 83 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து வந்த ஹெட்மெயர் 28, லலித் யாதவ் 14 ஆகியோர் ரன்களை அடிக்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 154 ரன்களை சேர்த்தது.

எளிய இலக்கு

எளிய இலக்கு

இதனால் 155 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர்கள் 1 ரன்னுக்கும், ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் வந்த சஞ்சு சாம்சன் அணியை மீட்க நிதானமாக விளையாடினார். ஆனால் சாம்சனுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க எந்த வீரும் உதவவில்லை.

 பார்ட்னர்ஷிப் இல்லை

பார்ட்னர்ஷிப் இல்லை

அதிரடி வீரர் டேவிட் மில்லர் (7), மஹிபால் லாம்ரார் (19), ரியான் பராக் (2), ராகுல் தேவட்டியா (9) என அனைவரும் வந்தவேகத்தில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் 99 ரன்களுக்குள் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மறுமுணையில் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 70 ரன்களை குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 121 ரன்களை மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் மீண்டும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Story first published: Saturday, September 25, 2021, 22:25 [IST]
Other articles published on Sep 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+