Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடக்கத்திலேயே மரண அடி...பவர் ப்ளேவில் நடந்த "அந்த" சம்பவம்.. சிஎஸ்கே சொதப்பியது இங்குதான்!

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ரிஷப் பண்டின் டெல்லி படை.

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கியுள்ள டெல்லி அணி, சிஎஸ்கேவின் பந்துவீச்சை துவம்சம் செய்து வருகிறது.

அணி இலக்கு

அணி இலக்கு

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் 2 விக்கெட்டை இழந்த போது சுரேஷ் ரெய்னாவின் அரை சதம், சாம் கரண், மொயின் அலியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

பவர் ப்ளே

பவர் ப்ளே

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் அந்த அணி பவர் ப்ளேவில் சென்னை அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்தது. முதல் 6 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை எடுத்தது.

புதிய ரெக்கார்ட்

புதிய ரெக்கார்ட்

சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடியுள்ள 24 போட்டிகளில் இதுவே அதிகபட்ச பவர் ப்ளே ஸ்கோர் ஆகும். சென்னை அணி பவுலர்கள் ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் மற்றும் சாம் கரண் ஆகியோரி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர். இதனால் டெல்லி அணியின் அடித்தளம் சிறப்பாக அமைந்தது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

பவர் ப்ளேவில்தான் அதிரடி காட்டினர் என்றால் அதன் பின்னரும் இவர்களின் பார்ட்னர்ஷிப் சென்னை அணி பவுலர்களை அச்சுறுத்தியது. அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

Story first published: Saturday, April 10, 2021, 23:08 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+