Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனைத்து தடைகளையும் உடைத்த ஜெய்ஷ்வால்.. வியந்துப்போய் தோனி கொடுத்த பரிசு.. வைரலாகும் புகைப்படம்!

அபுதாபி: நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தோனி அளித்த பரிசு வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக ரன் குவித்தது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூப்பளசிஸ் (25), சிரேஷ் ரெய்னா (3), மொயின் அலி (21) ஆகிய சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து சொதப்பினர். ஆனால் மறுபுறம் நின்று விளையாடிய இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவருக்கு துணையாக ஜடேஜா பார்ட்னர்ஷிப் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.

ரன் வேட்டை நடத்திய ராஜஸ்தான்

ரன் வேட்டை நடத்திய ராஜஸ்தான்

இமாலய இலக்கை இளம் வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணி எட்டிப்பிடிக்காது என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை மாற்றி அமைத்தார் யாஷஸ்வி ஜெய்ஷ்வால். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சிஎஸ்கே பவுலர்களை அவர் மிரட்டினார். 21 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களை விளாசினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியடைந்தது.

ஜெய்ஷ்வால் விளக்கம்

ஜெய்ஷ்வால் விளக்கம்

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஷ்வால், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினேன். அதற்கேற்றார் போலவே அமைந்தது. எனக்கு சரியான பந்துகளை மட்டும் சிக்ஸருக்கு விரட்ட வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அப்போது இருந்தது. அதன்படியே சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுத்தேன்.

Recommended Video

Rajasthan Team-க்கு எதிரான தோல்விக்கு இதான் காரணம் - Dhoni கொடுத்த விளக்கம்
தோனி பரிசு

தோனி பரிசு

இப்போட்டி முடிந்தப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி, எனக்கு பரிசு ஒன்றை கொடுத்தார். அதாவது நான் விளையாடிய பேட்டில் எனக்காக அவர் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மறக்க முடியாத தருணம் எனத்தெரிவித்தார். மேலும் அதுகுறித்த புகைப்படத்தையும் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Story first published: Sunday, October 3, 2021, 15:01 [IST]
Other articles published on Oct 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+