Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியின் பலம், பலவீனம், பெஸ்ட் ப்ளேயிங் 11 என்ன? இந்த முறை மீளுமா? முழு கணிப்பு இதோ!

மும்பை: வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம், ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சி.எஸ்.கே அணிக்கு கடந்த ஆண்டு மோசமாக அமைந்தது. அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட நுழைய முடியவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி செயல்படும் என மைக்கேல் குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.

 சி.எஸ்.கே பலம்

சி.எஸ்.கே பலம்

பேட்டிங்: கடந்த சீசனில் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி மிகவும் மிஸ் செய்தது. அவர் இந்தாண்டு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் மிடில் ஆர்டரில் ரன்கள் குவிய வாய்ப்புள்ளது. அதே போல பேட்டிங்கில் அனுபவம் நிறைந்த வீரர்களான, தோனி, டூப்ளசீஸ், உத்தப்பா, ஜடேஜா, அம்பத்தி ராயுடு, மொயின் அலி, சான் கரண் ஆகியோர் உள்ளனர். அவர்களுடன் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் கிருஷ்ணப்பா கௌதமும் உதவலாம்.

பந்துவீச்சை பொறுத்தவரை லுங்கி நெகிடி, ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹீர், தீபக் சஹார் போன்ற நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் உள்ளதால் பலமாக பார்க்கப்படுகிறது.

சி.எஸ்.கே பலவீனம்

சி.எஸ்.கே பலவீனம்

அணியின் நட்சத்திர பவுலர் ஹாசல்வுட் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார். தோனி, ரெய்னா, இம்ரான் தாஹீர், அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் சமீப காலமாக எந்த கிரிக்கெட் போட்டியும் ஆடவில்லை. ஜடேஜாவும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனவே அவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது. அதே போல சென்னை அணி அதிகளவில் ஸ்பின் பவுலர்களை வைத்துள்ளது. ஆனால் அந்த அணி ஆடவிருக்கும் மும்பை மற்றும் கொல்கத்தா மைதானங்களில் ஸ்பின் பவுலிங் எடுபடாது. எனவே அணியின் வியூகத்தை தோனி மாற்ற வேண்டும்.

சி.எஸ்.கே அணி வீரர்கள்

சி.எஸ்.கே அணி வீரர்கள்

எம்.எஸ். தோனி ( கேப்டன்) சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கே.எம்.ஆசிஃப், தீபக் சஹார், பிராவோ, டூப்ளசீஸ், இம்ரான் தாஹீர், ஜகதீசன், கார்ன் ஷர்மா, லுங்கி நெகிடி, மிட்சல் சாண்ட்னர், ஜடேஜா, ருத்ராஜ் கெயிக்வாட், ஷர்துல் தாக்கூர், சாம் கரண், சாய் கிஷோர், மொயின் அலி, கிருஷ்ணப்பா கௌதம், புஜாரா, ஹரிசங்கர் ரெட்டி, பஹத் வர்மா, ஹரி நிஷாந்த்.

சி.எஸ்.கேவின் சிறந்த ப்ளேயிங் 11

சி.எஸ்.கேவின் சிறந்த ப்ளேயிங் 11

ராபின் உத்தப்பா, டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட், எம்.எஸ்.தோனி, மொயின் அலி / பிராவோ, ஜடேஜா, சாம் கரண், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், இம்ரான் தாஹீர் / லுங்கி நெகிடி

ஆட்டத்தின் கணிப்பு

ஆட்டத்தின் கணிப்பு

சி.எஸ்.கே அணியின் தற்போதை வீரர்களையும், அவர்களின் அனுபவத்தையும் வைத்து பார்க்கும் போது, இந்த முறையும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல சிரமப்படும் என கூறப்படுகிறது. ஏனென்றால் வயதான வீரர்கள் மற்றும் சமீபத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்காத வீரர்கள் சோபிப்பார்களா என்ற பெரிய கேள்வி உள்ளது.

Story first published: Thursday, April 1, 2021, 17:18 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+