Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நான் சொல்றதுதான் இறுதி” அணித் தேர்வில் அடம்பிடித்தாரா தோனி?.. அந்த ஒரு வீரருக்காக இப்படியா செய்வது?

அமீரகம்: இன்று நடைபெறும் குவாலிஃபையர் போட்டியில் தோனியின் பிடிவாதத்தால் ஒரு வீரர் களமிறக்கப்படவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பு கட்டமே இப்போது தான் தொடங்கியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்கவுள்ளன.

அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் ப்ளே ஆஃப்

முதல் ப்ளே ஆஃப்

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிடும். இல்லையென்றால் சிக்கல் ஆகிவிடும். எனவே இந்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுத்த சென்னை அணி கோப்பையுடன் தான் தொடரை முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் உள்ளது. ஆனால் அதற்கு ஒரு தடை கற்களை போன்று கடந்த 3 போட்டிகள் அமைந்துவிட்டன.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஃபார்மில் இருந்த சிஎஸ்கே வெற்றிகளை குவித்து வந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டியில் தொடர் தோல்விகளை பெற்றுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் என மூன்று அணிகளும் வரிசையாக சென்னை அணியை சோதித்து பார்த்துவிட்டன. எனவே இன்றைய போட்டியில் சிறப்பான கம்பேக் கொடுப்பதற்காக ப்ளேயிங் 11 விஷயத்தில் தோனி கடும் கரார் காட்டி வருவதாக தெரிகிறது.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

கடைசி மூன்று தோல்விகளுக்கு முக்கிய காரணமாக சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் சரியில்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே அதனை பலப்படுத்த தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதாவது மிடில் ஆர்டரில் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டது பின்னடைவானது. அவருக்கு மாற்றாக களமிறங்கிய ராபின் உத்தப்பா, தனக்கு வழங்கப்பட்ட 2 வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பயிற்சியாளர்கள்

பயிற்சியாளர்கள்

இந்த சூழலில் தான் ரெய்னாவுக்கு காயம் குணமடைந்துவிட்டதாகவும், அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரெய்னாவை களமிறக்க பயிற்சியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். காயத்தில் இருந்து குணமடைந்து 2 நாட்கள் கூட ஆகாததால், ரெய்னாவின் உடற்தகுதி மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க கால அவகாசம் தேவைப்படும். எனவே அவரை நேரடியாக ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு அனுப்புவது ஆபத்தான முடிவு, இறுதிப்போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என கருதுவதாக தெரிகிறது. மேலும் ரெய்னாவுக்கு பதிலாக உத்தபாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால், இந்த போட்டியில் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்துவார் என்றும் கூறியுள்ளனர்.

தோனி பிடிவாதம்

தோனி பிடிவாதம்

ஆனால் பயிற்சியாளரின் முடிவுக்கு தோனி ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சீசனின் முதல் பாதி தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதே போல ப்ளே ஆஃப் போன்ற முக்கிய போட்டிகளில் ரெய்னா மிகவும் பொறுப்பாக விளையாடக்கூடியவர். எனவே அவர் நிச்சயம் ப்ளேயிங் 11 இருந்தே ஆக வேண்டும் என தோனி பிடிவாதம் செய்வதாக தெரிகிறது. இதனால் அணியின் ஆலோசனைக்கூட்டத்தில் பெரும் விவாதம் நடைபெற்றும் இறுதியில் தோனியின் முடிவுக்கு அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, October 10, 2021, 15:50 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+