Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியையே அச்சுறுத்தும் வீரர்.. இன்று சிஎஸ்கேவுக்கு சிக்கல்.. ப்ளேயிங் 11ல் களமிறக்கும் கேகேஆர்

அபுதாபி: தோனியையே அச்சுறுத்த கூடிய வீரர்களை கொண்டு கொல்கத்தா அணி இன்று களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று மதியம் 3 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றத்தை அடையும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுமே கடந்த 2 போட்டிகளிலும் அபார வெற்றிகளை குவித்து தற்போது சம பலத்துடன் மோதுகின்றன. கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறும். அதே போல சிஎஸ்கே வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 இளம் வீரர்

இளம் வீரர்

அசுர பலத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியை எதிர்த்து போட்டிப்போடுவதற்காக கொல்கத்தா அணி மிகப்பெரும் திட்டத்துடன் களமிறங்குகிறது. கடந்த 2 போட்டிகளிலும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர். இதற்கு முன்னர் ஆடிய 2 ஆட்டங்களிலும் உலகின் முன்னனி பவுலர்களை இவர் பந்தாடியுள்ளார். இதனால் ஒரு போட்டியில் 40+ ரன்கள் மற்றொரு போட்டியில் அரைசதமும் அடித்துள்ளார். கோலி மற்றும் ரோகித் சர்மாவே சமாளிக்க முடியாத இந்த வீரர் தோனிக்கும் பெரும் தலைவலி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

இதே போல முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் ராகுல் திரிபாதியும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளை சந்தித்த அவர் 74 ரன்களை விளாசி வெற்றி இலக்கை அடைய உதவினார். இதே போல கடந்த 2 போட்டிகளிலும் கொல்கத்தா அணியின் பவுலிங்கும் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை 92 ரன்களுக்குள் சுருட்டினர். அந்த அணியின் லாக்கி ஃபெர்க்யூசன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விக்கெட் எடுத்து வருகின்றனர்.

மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்ன?

கடந்த 2 போட்டியிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளதால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் எந்தவித மாற்றமும் இன்றி கொல்கத்தா அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரு பெரும் பலம் வாய்ந்த அணிகள் இன்று மோதவுள்ளன.

ப்ளேயிங் 11 என்ன?

ப்ளேயிங் 11 என்ன?

1) சுப்மன் கில், 2) வெங்கடேஷ் ஐயர், 3) ராகுல் த்ரிப்பாதி, 4) நிதிஷ் ராணா, 5) இயான் மோர்கன், 6) தினேஷ் கார்த்திக், 7) ஆண்ட்ரே ரசல், 8) சுனில் நரேன், 9) லாக்கி பெர்குசன், 10) வருண் சக்ரவர்த்தி, 11) பிரசித் கிருஷ்ணா

Story first published: Sunday, September 26, 2021, 14:40 [IST]
Other articles published on Sep 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+