Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சீனியர் வீரர் செய்யும் செயலா இது?”.. தினேஷ் கார்த்திக்கின் கோபம்.. பிசிசிஐ கொடுக்கும் தண்டனை என்ன?

அமீரகம்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் மோசமாக நடந்துக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

சுலபமான இலக்கு

சுலபமான இலக்கு

இந்த போட்டியில் பல்வேறு திருப்புமுணைகள் ஏற்பட்டிருந்த போதும், கேகேஆர் வீரர் தினேஷ் கார்த்தி செய்த செயல் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஓப்பனர்கள் சுப்மன் கில் 46 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும் விளாசி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் சேர்த்தனர். இதனால் கேகேஆர் அணி எளிதாக இலக்கை அடையவிருந்தது.

வரிசையாக இழந்த விக்கெட்கள்

வரிசையாக இழந்த விக்கெட்கள்

ஆனால் டெல்லி முட்டுக்கட்டை போட்டது. நேற்று 15 ஓவர்கள் முடியில் கொல்கத்தா அணி 113 ரன்கள் எடுத்து இருந்தது. வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கொல்கத்தா இழந்திருந்தது. ஆனால் அதன்பின்தான் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நார்ட்ஜ் வீசிய 16 ஓவரில் 10 ரன்கள் செல்ல 1 விக்கெட் விழுந்தது. இதன் பின் வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன.

தினேஷின் காயம்

தினேஷின் காயம்

இதுபோன்ற இக்கட்டான சூழலில் தினேஷ் கார்த்திக் தான், அணியை மீட்பார். அந்தவகையில் நேற்று அவர் களமிறங்கிய போது ரபாடா அவருக்கு எதிராக பந்துவீசினார். 18வது ஓவரின் கடைசி பந்தான அதில் தினேஷ் கார்த்திக் போல்ட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். கிராஸ் லைனில் போடப்பட்ட அந்த பந்து க்ளீன் போல்ட் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கார்த்திக் ஸ்டம்பை வேண்டுமென்றே ஓங்கி அடித்துவிட்டு சென்றார்.

 தண்டனை என்ன?

தண்டனை என்ன?

இது ஐசிசியின் லெவல் 1 மற்றும் 2.2 விதிகளின்படி தவறான செயலாகும். தினேஷ் கார்த்திக்கும் தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டார். லெவல் 1 விதிகளை மீறினால் களத்தில் இருந்த நடுவரின் முடிவே அவர்களுக்கு இறுதியான தண்டனையாக கொடுக்கப்படும். எனவே நடுவர் என்னக்கூறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, October 14, 2021, 17:06 [IST]
Other articles published on Oct 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+