Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தெனாவட்டு வேண்டாம்டா’ பொதுவெளியில் பொசுக்குனு திட்டிய தினேஷ் கார்த்திக்..கேட்காத மாதிரி சென்ற வருண்

சார்ஜா: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தியை களத்திலேயே தினேஷ் கார்த்திக் திட்டியது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டெல்லியின் ஓப்பனிங்

டெல்லியின் ஓப்பனிங்

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கம் அதிரடியாக இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் முதல் பந்து முதலே பவுண்டரிகளை குவிக்கத் தொடங்கினார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 20 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் 5 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் மட்டுமே எடுத்த சூழலில் நடையை கட்டினார் சுனில் நரேன் வீசிய பந்தில் போல்டானார். இதனால் 40 ரன்களுக்குள் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

தினேஷ் கார்த்திக் ஆலோசனை

தினேஷ் கார்த்திக் ஆலோசனை

இந்த போட்டியில் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், தினேஷ் கார்த்திக்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் களத்தில் உள்ள தமிழக வீரர்களிடம் விக்கெட் கீப்பர் தினேஷ்கார்த்திக் தமிழில் பேசி யோசனை கொடுப்பார். அந்தவகையில் இன்று வருண் சக்கரவர்த்தி பந்துவீசும் போது பேசியது திட்டும் வகையில் இருந்துள்ளது.

வருண் சக்கரவர்த்தி ஓவர்

வருண் சக்கரவர்த்தி ஓவர்

ஆட்டத்தின் 8வது ஓவரின் போது டெல்லி அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்-ஐ எதிர்த்து வருண் சக்கரவர்த்தி பந்துவீசினார். அப்போது ரிஷப் பண்ட் தூக்கி அடிப்பாரா அல்லது சிங்கிள் அடிப்பாரா என்ற குழப்பத்தில் வருண் பந்துவீசி வந்துள்ளார். அப்போது களத்தில் பேசிய தினேஷ் கார்த்திக், 'டேய் வருண்.. அவன் மாத்திலாம் ஆட மாட்டான்.. நீ நார்மலா பந்த போடு' எனக்கூறினார். இதே போல ' நீ புதுசா எதையும் ட்ரை பண்ணாத, ஒரே மாறி போடு' என்றும் கூறினார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இதற்கு ஏற்றார் போலவே வருண் சக்கரவர்த்தி பந்துவீசி வந்தார். ஆனால் அப்போது பேசிய தினேஷ், ' டேய் வருண் தெனாவட்டு வேண்டாம்டா.. நீ வீசுற 4 ஓவருக்கும் சேர்த்து 10 - 12 ரன்கள் தான் வரணும்.. புரியுதுல.. அடிச்சா பாத்துக்கலாம்... எதையும் மாத்தாத' என்று கூறினார். வருண் சக்கரவர்த்தியை திடீரென தெனாவட்டு வேண்டாம் என தினேஷ் கார்த்திக் கூறியது ஸ்டம்ப் மைக்கின் வாயிலாக அனைவருக்கும் கேட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, September 28, 2021, 17:30 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+