மொத்தமாக பறிபோகிறது.. நீக்கத்திற்கு ரெடியாகும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.. இப்படி ஒரு நிலையா?
சென்னை: மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக். கடந்த வருடம் முழுக்க இவருக்கு இந்திய அணியில் நிறைய போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. தோனியின் ஓய்விற்கு பின் இவருக்கு இந்திய அணியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியின் கே. எல் ராகுல் தொடங்கி பண்ட் வரை பலர் கீப்பிங் செய்வதற்காக முயன்று வருகிறார்கள். இதனால் தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்பு இல்லை .

முடிந்துவிட்டது
ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வாகவில்லை. அதேபோல் இங்கிலாந்து தொடரிலும், டி 20 உலகக் கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது .

மோசம்
இப்படிபட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது. இவரை கொல்கத்தா அணி விடுவிக்க போவதாக தகவல்கள் வருகிறது . 2021ல் நடக்க உள்ள ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுக்கும் எண்ணம் கொல்கத்தா அணிக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

எப்படி
2020 ஐபிஎல் தொடரிலேயே பாதியில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் இருந்து விலகி இயான் மோர்கனுக்கு கேப்டன்சியை கொடுத்தார் . அந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் ஆடவில்லை.

நீக்கம்
இதனால் தற்போது ஐபிஎல் 2021 தொடரில் கொல்கத்தா அணியால் இவர் எடுக்கப்பட மாட்டார். இதன் காரணமாக இவரை சென்னை உள்ளிட்ட அணிகள் எடுக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளும் கூட தினேஷ் கார்த்திக்கை எடுக்க முயலும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications