Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘எல்லாமே நடிப்பா கோபால்’.. க்ருணால் பாண்ட்யாவின் பெருந்தன்மை.. உண்மை தெரிந்து விளாசும் ரசிகர்கள்!

அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் க்ருணால் பாண்ட்யா பெருந்தன்மையாக நடந்துக்கொண்டது நடிப்பு என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சொதப்பிய பஞ்சாப்

சொதப்பிய பஞ்சாப்

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 21 (22), மந்தீப் சிங் 15 (14) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கிறிஸ் கெய்லும் 1 (4), நிகோலஸ் பூரண் 2 (3) ஆகியோரும் அதிர்ச்சி கொடுத்தனர். கடைசி சில ஓவர்களில் மார்க்கரம் 42 (29), தீபக் ஹூடா 28 (26) அடிக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

இதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் 8 (10), டிகாக் 27 (29), சூர்யகுமார் யாதவ் (0) ஆகியோர் ஏமாற்றினர். மிடில் ஆர்டரில் சௌரப் திவாரி நிலையாக நின்று 45 ரன்கள் அடித்துக் கொடுத்தார். கடைசி சில ஓவர்களில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் என அதிரடி காட்ட மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்று மும்பை அணி மீண்டும் ப்ளே ஆஃப் ரேஸில் நுழைந்துள்ளது.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

இந்த போட்டியில் தான் சுவாரஸ்ய விஷயம் ஒன்று நடந்தது. பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது 6வது ஓவரை க்ருணால் பாண்ட்யா வீசினார். அப்போது பேட்டிங்கில் கெயில் நின்றுக்கொண்டிருந்தார். க்ருணால் வீசிய யார்க்கர் பந்தை ஸ்ட்ரைட்டாக அடிக்க கெயில் முயன்ற போது மறுமுனையில் நின்றுக்கொண்டிருந்த கே.எல்.ராகுலின் காலில் பட்டது. இதனால் அவர் கிறீஸுக்கு திரும்புவதற்குள் க்ருணால் பாண்ட்யா பந்தை ஸ்டம்பில் அடித்து அவுட்டாக்கினார். அதற்கு 3வது நடுவருக்கு அப்பீல் செய்தார் களத்தில் இருந்த நடுவர். பின்னர் பந்தில் அடிபட்டதற்கு எல்லாம், அவுட் கொடுக்காதீர்கள் என க்ருணால் பாண்ட்யாவின் அப்பீலை திரும்பப் பெற்றார்.

வெளியான உண்மை

வெளியான உண்மை

க்ருணால் பாண்ட்யாவின் இந்த குணத்தை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் வீடியோவை பகிர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் அவை எல்லாம் பொய் என கூறப்படுகிறது. பந்து தாக்கி விழுந்த கே.எல். ராகுல், கிரீஸுக்கு உள்ளே வந்துவிட்டார். அதன் பின்னர் ஸ்டெம்பில் பந்தை அடித்து ரன் அவுட் கேட்டார் குர்ணால். எனவே ரோஹித் அங்கிருந்து குரல் கொடுத்தவுடன் டக்கென ரிவ்யூ வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார். எனவே இது ஃபேர் பிளேவுக்காக செய்தது என தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, September 29, 2021, 16:12 [IST]
Other articles published on Sep 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+