Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பர்பார்மன்சை வச்சுதான் டி20 உலக கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப் போறோம்... லாங்கர் உறுதி

சிட்னி : ஐபிஎல் தொடர்களில் எப்போதுமே ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பங்களிப்பு இருக்கும்.

இந்த ஆண்டும் வார்னர், ஸ்மித், மாக்ஸ்வெல், ஹாசல்வுட் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான வகையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கான வீரர்கள் தேர்வை ஐபிஎல் 2021 தொடரை வைத்தே மேற்கொள்ளவுள்ளதாக ஆஸ்திரேலிய தலைமை கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்

ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்

இந்தியாவின் கிரிக்கெட் அடையாளமாக மாறியுள்ள ஐபிஎல்லின் இந்த சீசன் அடுத்த மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர்களில் எப்போதுமே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஒரு தனி க்ரேஸ் இருப்பதை போலவே இந்த ஆண்டும் அதிகமான ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.

ஐபிஎல்லில் ஆஸ்திரேலிய வீரர்கள்

ஐபிஎல்லில் ஆஸ்திரேலிய வீரர்கள்

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், ஹாசல்வுட் உள்ளிட்ட வீரர்கள் இந்த சீசனுக்காக தயாராகி வருகின்றனர். புதிதாக ரிலே மெரேடித் மற்றும் ஜியே ரிச்சர்ட்சன் ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஆடிஷனான ஐபிஎல் தொடர்

ஆடிஷனான ஐபிஎல் தொடர்

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான ஆடிஷனாகவே தான் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதாக ஆஸ்திரேலிய தலைமை கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வீரர்களின் பார்மை நன்கு கவனித்து அவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறமைகளை கண்டுணரலாம்

திறமைகளை கண்டுணரலாம்

அனைத்து வீரர்களும் நெருக்கடிகளுடனேயே போட்டிகளை விளையாடி வருவதை சுட்டிக் காட்டிய லாங்கர், டி20 உலக கோப்பை தொடரும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ள நிலையில் முன்னதாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் சிறப்பான திறமைகளை எளிதாக கண்டுணர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோப்பையை தவறவிட்ட ஆஸ்திரேலியா

கோப்பையை தவறவிட்ட ஆஸ்திரேலியா

இதுவரை டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி கொண்டதில்லை. இந்நிலையில் கடந்த நியூசிலாந்து டி20 தொடரில் இடம்பெறாத சில வீரர்கள் உலக கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் லாங்கர் கூறியுள்ளார். இந்த தொடரில் 2க்கு 3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 10, 2021, 14:03 [IST]
Other articles published on Mar 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+