Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘இத பண்ணுங்க ஜெயிப்பீங்க’.. தோனிக்கு வெற்றி பெற ஐடியா கொடுத்த கம்பீர்.. நல்லாதானே இருக்கு!

அமீரகம்: ப்ளே ஆஃப் சுற்றுகளில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்காக தோனிக்கு கவுதம் கம்பீர் முக்கிய அட்வைஸ் கூறியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்த சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுகள் நாளை தொடங்குகிறது.

லீக் போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள், நாளை நடைபெறவுள்ள குவாலிஃபையர் 1 போட்டியில் மோதுகிறது. இந்த தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறும் வரை அபார வெற்றிகளை பெற்று வந்த சிஎஸ்கே அணி, திடீரென சரிவை கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்விகளை பெற்றிருக்கிறது.

மோசமான நிலை

மோசமான நிலை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசம், டெல்லி அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசம், ராஜஸ்தானுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசம் என மோசமான தோல்விகளை சந்தித்தது. இந்த 3 தோல்விகளுக்கும் மிகப்பெரிய காரனம் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரின் சொதப்பல்களே ஆகும். அதனை சரிசெய்வதற்காக தான் தோனி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா ஃபார்ம் அவுட்டில் இருந்தது தான் மிடில் ஆர்டர் சரிவுக்கு காரணமாக இருந்தது. இதனையடுத்து கடந்த 2 போட்டிகளாக ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்பட்டார். ஆனால் அவரும் பெரிதாக சோபிக்கவில்லை. 2 போட்டிகளிலும் மொத்தமாகவே 21 ரன்களை தான் அடித்தார். இதனால் மீண்டும் ரெய்னாவையே கொண்டு வந்துவிடலாம் என சிஎஸ்கே அணிக்குள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் ரெய்னா கடந்த 5 போட்டிகளில் 4, 17*, 11, 2, 3 ஆகிய ஸ்கோர்களையே அடித்துள்ளார்.

கம்பீர் ஆலோசனை

கம்பீர் ஆலோசனை

இந்நிலையில் அணித் தேர்வு குறித்து தோனிக்கு, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் முக்கிய அட்வைஸ் கூறியுள்ளார். அதில் அவர், ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்றும் ராபின் உத்தப்பாவுக்கே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உத்தப்பா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்.

 பவுலிங் அட்வைஸ்

பவுலிங் அட்வைஸ்

இதே போல பந்துவீச்சிலும் கம்பீர் அட்வைஸ் கூறியுள்ளார். டெத் ஓவர்களில் தீபக் சஹார் மற்றும் பிராவோவையே பயன்படுத்தி வருகிறார் தோனி. ஆனால் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஹாசல்வுட்டிற்கும் டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் டெல்லி அணியில் 6 மற்றும் 7வது வரிசையில் அக்‌ஷர் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் பேட்டிங் செய்கின்றனர். எனவே அவர்களை சாய்க்க ஹாசல்வுட் கொண்டு வரவேண்டும்.

Story first published: Saturday, October 9, 2021, 20:58 [IST]
Other articles published on Oct 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+