For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிச்சயம் வருத்தப்படுவார். தோனி விரித்த வலை.. சிக்கிய ஆண்ரே ரஸல்.. எல்லாம் போச்சா.. கம்பீர் ஆதங்கம்!

மும்பை: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தோனியின் ஸ்கெட்சில் ஏமாந்து போனதற்கு ரஸல் நிச்சயம் வருத்தப்படுவார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni தந்த அட்வைஸ்.. CSK-வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள் | Oneindia Tamil

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி முதல் 5 விக்கெட்டுகள் 31 ரன்களுக்குள் சரிந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஜோடி சிஎஸ்கே பவுலர்களுக்கு தலைவலி கொடுத்தனர்.

தோனி ஸ்கெட்ச்

தோனி ஸ்கெட்ச்

சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வந்த ஆண்ட்ரே ரஸல் கொல்கத்தா அணியின் ஸ்கோரை 31 என்ற நிலையில் இருந்து அடுத்த விக்கெட்டிற்கு 112 ரன்கள் வரை எடுத்துச்சென்றார். இதனால் ரஸலின் விக்கெட்டை எடுக்க பவுலர்கள் திணறிய போது, கடைசியில் சாம் கரண் அவரை பௌல்ட் செய்து விக்கெட் எடுத்தார். ரஸல் 21 பந்துகளில் அதிரடி அரைசதம் கண்டு வெளியேறினார். ரஸலின் விக்கெட்டிற்காக தோனி போட்ட ஸ்கெட்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ரஸலுக்கான வியூகம்

ரஸலுக்கான வியூகம்

சாம் கரண் ரஸலின் விக்கெட்டை எடுத்த 13வது ஓவருக்கு முன்னதாக 11வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வீசி ரஸலின் மனநிலையை அதற்கு செட் செய்தார். அந்த ஓவரில் ரஸல் விளாசி தள்ளினார். மேலும் முழுதுமாக ஆஃப் சைடில் பீல்டிங்காக நிறுத்தப்பட்டது. இதனால் அடுத்து வரும் சாம் கரனும் வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் வீசுவார் என்று முன் கூட்டியே தீர்மானித்து வைத்திருந்த ரஸல் ஆஃப் சைட் திசையில் ஒதுங்கி சாம் கரன் பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து லெக் ஸ்டம்புக்கு நேராக வந்ததை தவறாக அவர் வைடு என நினைத்து ஆடாமல் விட்டதால் பௌல்ட் ஆனார்.

கம்பீர் பாராட்டு

கம்பீர் பாராட்டு

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் கம்பீர், ரஸலின் விக்கெட் எடுக்கப்பட்ட விதம் பாராட்டுக்குறியது. ஏனெனில் பந்துவீச்சு வியூகம் மற்றும் தோனி செய்து வைத்திருந்த ஃபீல்ட் செட்டிங்ஸ், சாம் கரண் அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்போகிறார் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ரஸலும் அதற்காக தான் தயாராக இருந்தார். ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

நிச்சயம் வருத்தப்படுவார்

நிச்சயம் வருத்தப்படுவார்

ரஸல் அதிரடி காட்டிய விதம் நிச்சயம் இன்னும் 4-5 ஓவர்கள் ஆடியிருந்தால், அணியின் வெற்றி நிச்சயம் கிடைத்திருக்கும் என்பது அவரின் ஆழ்மனதிற்கு தெரிந்திருக்கும். தான் சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பையும் அணியை வெற்றி பெறச் செய்யும் வாய்ப்பையும் இழந்ததாக அவர் நிச்சயம் எண்ணி வருத்தப்படுவார். ஒருவேளை சாம் கரனின் அந்தப் பந்தை அவர் தடுத்து ஆடியிருந்தால் கொல்கத்தா அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என கம்பீர் தெரிவித்தார்.

Story first published: Thursday, April 22, 2021, 15:35 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
Gautam Gambhir’s view on Andre Russell's dismissal in CSK Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+