ராஜஸ்தான் அணிக்கு வரப்போகும் கூடுதல் பலம்.. களத்தில் தயாராகவிருக்கும் முக்கிய வீரர்.. முழு விவரம்!
இங்கிலாந்து: காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் குறித்த புது அறிவிப்பு ராஜஸ்தான் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14வது ஐபிஎல் தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் அந்த அணிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கும் விஷயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்ச்சருக்கு காயம்
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக வந்திருந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போதும் அவர் இந்தியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் ஆடினார். இதனால் காயம் பெரிதாகி அவர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஓய்வு எடுத்து வந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார்.

பயிற்சி
இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியை தொடங்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜோரா ஆர்ச்சர் இந்த வாரம் முதல் சாதரணமான முறையில் பந்துவீச்சு பயிற்சி பெறலாம் என்றும் அடுத்த வாரம் முதல் முழு வேகத்தில் பந்துவீச்சு பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி
இந்த அறிவிப்பால் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் ஐபிஎல் தொடரில் விரைவில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆர்ச்சரை கடந்த 2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் எடுத்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட ரூ.7.2 கோடி தகுதியானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் ஆர்ச்சரின் பந்துவீச்சு அமைந்திருந்தது. கடந்த 3 தொடர்களிலும் ஆர்ச்சர் தனது பந்துவீச்சால் எதிரணியை மிரளவைத்தார்.

எப்படி வாய்ப்பு
எனினும் ஆர்ச்சர் தற்போது பயிற்சி மேற்கொள்வதற்கான தேர்வில் தான் தேர்வாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து எந்த அறிவிப்பையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு வேளை அவர் முழு உடற்தகுதியுடன் திரும்பினால், ஐபிஎல்-ன் 2ம் பாதியில் ராஜஸ்தான் அணியுடன் இணையலாம்.


Click it and Unblock the Notifications