For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா அணிக்குள் குழப்பம்.. இருவீரர்களுக்கு இடையே கடும் போட்டி.. யாருக்கு கிடைக்கு வாய்ப்பு?

சென்னை: இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended Video

KKRக்கு சின்ன விசில் அடிங்க - Dinesh karthik அன்பான வேண்டுகோள் |Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியில் இன்றிரவு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல அணியின் ப்ளேயிங் 11ல் என்னவாக இருக்கும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

3வது போட்டி

3வது போட்டி

ஐபிஎல் தொடரில் இதுவரை 2 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இதுவரை 2 முறை கோப்பை வென்றுள்ள கொல்கத்தா அணியை 1 முறை கோப்பை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி எதிர்கொள்கிறது. கடந்தாண்டு கொல்கத்தா அணி மோசமாக செயல்பட்டதால் தொடரின் பாதியிலேயே கேப்டன்சி மோர்கனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவரின் தலைமையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

அயல்நாட்டு வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள்

போட்டி நெருங்கி வரும் நிலையில் கொல்கத்தா அணியின் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும். அதன்படி கேப்டன் மோர்கன் கண்டிப்பாக ஒரு இடத்தை எடுத்துக்கொள்வார். அடுத்ததாக பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இடம்பெறுவார். அணியில் இருக்கும் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சு செய்யும் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசுல் கண்டிப்பாக அணியில் இடம்பெறுவார்.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என மூன்று வீரர்கள் இடம்பெற்றதால் 4வது இடத்திற்கு சுனில் நரைன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று போட்டி நடைபெறும் சென்னை மைதானம் ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடிய ஒன்று. எனவே சுனில் நரைன், சகிப் அல் ஹசன் இருவருமே பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். இதனால் யாருக்கு வாய்ப்பு என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

சகிப்

சகிப்

வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் ஐபிஎல்-ல் 2011 முதல் 2017ம் ஆண்டு வரை கொல்கத்தா அணியில் தான் செயல்பட்டார். பின்னர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு சென்ற அவர், இந்தாண்டு மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார். அவரின் தேவை அதிகம் இருப்பதால்தான் ரூ. 3.2 கோடிக்கு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, April 11, 2021, 17:47 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
Heavy Competition between Shakib Al Hasan & Sunil Narine for KKR Playing 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+