Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களுக்கு சர்பிரைஸ்; களமிறங்கும் ஆஸி., பவுலர் - கன்ஃபார்ம் செய்த சிஇஓ காசி விஸ்வநாதன்

அமீரகம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. தினம் தினம் எரிந்த பிணங்களுக்கு நடுவே ஐபிஎல் தொடரை ரசிக்கும் மனநிலையில் அப்போது எவருமே இல்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

சென்னை vs மும்பை

சென்னை vs மும்பை

ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது.

பயோ பபுள்

பயோ பபுள்

இந்தத் தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில், தொடரின் 2ம் பாதி தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளுமே அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13-ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

இதற்கிடையே, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் என அனைவருமே கடந்த ஆக.20ம் தேதி முதல் தங்களது முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தொடங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

இந்த இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில வீரர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதுவரை, பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்த ஆண்டு ஐபிஎல்லில் தனது அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) க்காக விளையாடுவதை உறுதி செய்துள்ளார். (அப்படிப் போடு!)

காசி விஸ்வநாதன்

காசி விஸ்வநாதன்

Shield பைனலில் விளையாடுவதற்காகவும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் நேரத்தை செலவிடுவதற்காகவும் முதல் பகுதி ஐபிஎல் தொடரில் ஹேசில்வுட் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் தான், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கேஎஸ் விஸ்வநாதன் ஹேசில்வுட் விளையாடுவதை உறுதி செய்துள்ளார். செப்டம்பர் 19 முதல் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிக்கான தனது இருப்பை ஹேசில்வுட் உறுதிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் முதல் பாதியில் விளையாடாத வீரர்கள் ஃபிட்டாகவும் முழு உடற்தகுதியுடனும் இருந்தால் இரண்டாம் கட்ட தொடரில் அந்தந்த அணிகளில் சேரலாம் என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஹேசில்வுட்டின் தற்போதைய ஃபார்ம், நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

செப் 19 முதல்

செப் 19 முதல்

ஐபிஎல் இரண்டாம் கட்ட போட்டிகள் செப்டம்பர் 19 முதல் மீண்டும் தொடங்குகிறது. இறுதிப் போட்டிகள் அக்டோபர் 15ல் நடைபெறும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை பிற்பகல் 3:30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும். 31 போட்டிகளில் பெரும்பாலானவை துபாயில் (13), ஷார்ஜா (10) மற்றும் அபுதாபி (8) ஆகிய இடங்களில் நடைபெறும். லீக் கட்டத்தின் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும். இத்தொடரில், அக்டோபர் 10 அன்று குவாலிஃபையர் 1 போட்டி துபாயிலும், எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 2 ஷார்ஜாவில் முறையே அக்.11 மற்றும் அக்.13ல் தொடங்கும்.

Story first published: Monday, August 23, 2021, 12:12 [IST]
Other articles published on Aug 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+