Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேன் வில்லியம்சன் சொன்ன அந்த வார்த்தை.. ஆடிப்போன ஹைதராபாத்.. சிஎஸ்கே அணிக்கு தாவும் ஜென்டில்மேன்!

சிட்னி: 2021 ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் ஹைதராபாத் அணி வீரர் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டி ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கேன் வில்லியம்சன் என்ன மாதிரியான திட்டத்தில் இருக்கிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. பெரிய அளவில் இல்லாமல்.. சிறிய அளவில் ஏலம் நடத்தப்பட உள்ளது.

ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு செல்ல விரும்பும் வீரர்களை வைத்து மட்டும் ஏலம் நடக்க உள்ளது. இதனால் முக்கியமான சில வீரர்கள் ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு இடமாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீரர்கள்

வீரர்கள்

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஹைதராபாத் அணி வீரர் கேன் வில்லியம்சன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இது தொடர்பான விவரங்கள் முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது. முக்கியமான மூன்றும் விஷயங்களால் கேன் வில்லியம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறலாம் என்று கூறப்பட்டது.

மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள்

அதன்படி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தனது நியூசிலாந்து அணியை சேர்ந்த கேன் வில்லியம்சனிடம் இது குறித்து பேசினார் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணிக்கு மாற விருப்பமா என்று நேரடியாகே கேன் வில்லியம்சனிடம் பிளமிங் கேட்டு இருக்கிறார். கடந்த ஐபிஎல் சீசனிலேயே இது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

 என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பு இல்லை. சில போட்டிகளில் இவருக்கு அணியிலேயே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ஹைதராபாத் அணி தன்னை மதிக்காத காரணத்தால் கேன் வில்லியம்சன் வேறு அணிக்கு மாற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில்தான் தற்போது கேன் வில்லியம்சன் அதிரடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும். அவரின் கேப்டன்சி நுட்பங்கள் சிறப்பாக உள்ளது. அவருக்கு கீழ் ஆட வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. அவரின் கேப்டன்சியை அருகில் இருந்து பார்க்க விருப்பம், என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

ஆடிப்போனது

ஆடிப்போனது

கேன் வில்லியம்சனின் இந்த பேட்டியை பார்த்து ஹைதராபாத் அணி ஆடிப்போய் உள்ளது. சிஎஸ்கே அணிக்கு தாவும் முடிவில் கேன் வில்லியம்சன் இருக்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. தோனி ஓய்விற்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் சிஎஸ்கே அணிக்கு மாற கேன் வில்லியம்சன் விரும்புகிறார் என்கிறார்கள்.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

ஆனால் கேன் வில்லியம்சனை வேறு அணிக்கு அனுப்பும் விருப்பம் ஹைதராபாத் அணிக்கு இல்லை. கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியில்தான் தொடர்வார் என்று வார்னர் ஏற்கனவே கூறிவிட்டார். ஆனால் சிஎஸ்கே அணி கூடுதல் பணம் கொடுத்து அவரை ஏலம் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Friday, December 25, 2020, 16:37 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+