Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தான் மிக முக்கியம்.. சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டாம் என கூறிய முன்னாள் வீரர்..செம துணிச்சல்

மும்பை: ஐபிஎல் போட்டிக்காக சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டும் என கோரியுள்ளார் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மே 30-ந் தேதி வரை இந்த போட்டி மும்பை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் போது பல்வேறு சர்வதேச தொடர்கள் திட்டமிடப்படுவதால் அயல்நாட்டு விரர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் போட்டி தொடருக்காக அனைத்து வீரர்களும் இந்தியாவுக்கு கிளம்பி வந்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சில வீரர்கள் சர்வதேச தொடர்கள் காரணமாக பங்கேற்க முடியாமல் போகிறது. நாட்டிற்காக விளையாடுவதை விட ஐபிஎல் முக்கியமாக போனதா என்ற சர்ச்சையும் வீரர்கள் மீது கிளம்புகிறது. இந்த சர்ச்சையில் சமீபத்தில் ஐபிஎல்-ல் பங்கேற்க விரும்பிய வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் சிக்கினார். வங்கதேச அணி தற்போது நியூசிலாந்து தொடரை முடித்துள்ளது. இம்மாத இறுதியில் இலங்கையுடம் மோத திட்டமிட்டுள்ளது.

குழப்பம்

குழப்பம்

இதே போல் இங்கிலாந்து வீரர்கள் 14 பேர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். இத்தொடர் முடிந்த உடனேயே இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் சில வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்கலமா அல்லது பாதியில் வெளியேறலாமா என குழம்பி வருகின்றனர்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்த நிலையில் ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டில், ஐ.பி.எல். கிரிக்கெட் மிகப்பெரிய திருவிழா போன்று நடத்தப்படுகிறது . எனவே ஐ.பி.எல். நடைபெறுகிற காலக்கட்டத்தில் சர்வதேச தொடர்கள் எதையும் நடத்தக்கூடாது என்பதை கிரிக்கெட் வாரியங்கள் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஓய்வு வழங்கிய அணிகள்

ஓய்வு வழங்கிய அணிகள்

பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணி தனது முக்கிய வீரர்களை ஐபிஎல் போட்டிக்காக இந்தியாவுக்கு செல்ல அனுமதித்துள்ளது. அதே போல நியூசிலாந்து அணியும் ஐபிஎல்-க்கு செல்லவிருந்த வீரர்களுக்கு வங்கதேச அணியுடனான தொடரின் போது ஓய்வு அளித்தது.

Story first published: Saturday, April 3, 2021, 21:37 [IST]
Other articles published on Apr 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+