Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோதிக்கொள்ளும் இரு மான்ஸ்டர்கள்...ஸ்டேடியம் தாங்காதுப்பா... இப்படில்லாம் சவாலா விடுறதா...விவரம் இதோ

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட் , பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் கெயிலுக்கு விடுத்துள்ள சவால் இரு அணிகளுக்கு இடையே களவரத்தை தூண்டியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வீரர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ் கெயிலுக்கு கடினமான சவால் ஒன்றை பொல்லார்ட் விடுத்துள்ளது ரசிகர்களிடையே ஐபிஎல் போட்டிக்கான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

 அதிரடி

அதிரடி

சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை வீரர் தனஞ்சயா வீசிய ஓவரில் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் யுவ்ராஜ் சிங், தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்செல் கிப்ஸுன் சாதனையை சமன் செய்தார். இவரின் ஃபார்ம் அப்படியே ஐபிஎல் தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெயிலுக்கு சவால்

கெயிலுக்கு சவால்

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெயிரன் பொல்லார்ட், கிறிஸ் கெயிலுக்கு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்க முடியுமா என்ற சவாலை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பஞ்சாப் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில், அதிக சிக்ஸர் அடிக்கும் சவாலை வைத்துக்கொள்வோமா என கேட்டுள்ளது.

இருவரின் பலம்

இருவரின் பலம்

41 வயதாகும் கிறிஸ் கெயில் ஐபிஎல் அதிக சிக்ஸர் அடித்த வீரர் ஆவார். 132 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 349 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அதே போல கெயீரன் பொல்லார்ட் 164 போட்டிகளில் ஆடி 198 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் இந்த முறை சிக்ஸர் களவரம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெயில் ஒருவேளை 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்துவிட்டால் ஐபிஎல்-ல் அந்த சாதனையை செய்யும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

மும்பை - பஞ்சாப்

மும்பை - பஞ்சாப்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் ஏப்ரல் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த முறை அணியில் பல வீரர்களை மாறியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பை வென்றே தீரவேண்டும் என்ற களமிறங்கியுள்ளது.

Story first published: Thursday, March 11, 2021, 18:24 [IST]
Other articles published on Mar 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+