Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘வழக்கம் போல்’.. ஐபிஎல்-ல் வெளியேறிய ஆர்சிபி.. விராட் கோலியின் கேப்டன்சிக்கு முடிவு!

அமீரகம்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அணி 20 ஓவர்களில் 138 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஆர்சிபி சொதப்பல்

ஆர்சிபி சொதப்பல்

ஆர்சிபி அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தேவ்தத் பட்டிக்கல் மற்றும் கோலி ஆகியோர் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தனர். பட்டிக்கல் (21), கோலி (39) ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் வந்த ஸ்ரீகர் பரத் (9), மேக்ஸ்வெல் (15), டிவில்லியர்ஸ் (11) ஆகியோர் சுனில் நரேனின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய நரேன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

139 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 29 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களும் அடிக்க முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்ந்தது. இதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அணியின் ஸ்கோரை உயர்த்தி செல்ல வேண்டும் என்ற நேரத்தில் சுனில் நரேன் களமிறங்கினார்.

ஆட்டத்தை மாற்றிய நரேன்

ஆட்டத்தை மாற்றிய நரேன்

டேன் கிறிஸ்டியன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக சுனில் நரேன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக கேகேஅர் பக்கம் திருப்பினார். இதனால் பின்னர் வந்த ராணா (23), தினேஷ் கார்த்தி (10) என சேர்க்க அந்த அணி 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த கண்டம்

அடுத்த கண்டம்

இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி 14வது ஐபிஎல் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வரும் அக்டோபர் 13ம் தேதியன்று டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளவுள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

Story first published: Monday, October 11, 2021, 23:28 [IST]
Other articles published on Oct 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+