Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போதானே இந்த அதிர்ச்சி வந்தது..அதுக்குள்ள இன்னோனா.. அடிமேல் அடிவாங்கும் மோர்கன்.. நேரம் சரியில்லை!

மும்பை: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தாண்டி பெரும் அதிர்ச்சி ஒன்று கொல்கத்தா அணி கேப்டன் மோர்கனுக்கு வந்துள்ளது.

Recommended Video

CSK-விடம் தோல்வி..Eoin Morgan விரக்தி பேச்சு! | IPL T20 | CSK VS KKR | Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் தடுமாறிய போதும் மிடில் ஓவர்களில் மீண்டு வந்த கொல்கத்தா கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.

போட்டி

போட்டி

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 95 ரன்களும், ருத்ராஜ் கெயிக்வாட் 64 ரன்களும் எடுத்து அணிக்கு உதவினர். இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் 31 /5 விக்கெட்களை இழந்து டாப் ஆர்டரே சரிந்தது.

 அதிர்ச்சி செய்தி

அதிர்ச்சி செய்தி

இதன் பின்னர் வந்த தினேஷ் கார்த்தி, ரஸல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை மீட்டனர். இருப்பினும் 19.1 ஓவர்களில் 208 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. கடைசி ஓவர் வரை போராடியும் வெற்றி பெற முடியவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் விரக்தியடைந்துள்ள நிலையில் அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

அபாரதம் விதிப்பு

அபாரதம் விதிப்பு

போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே போல அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறை என்பதால் கேப்டனுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்ன இதே சீசனில் சிஎஸ்கே கேப்டன் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் விதிமுறை

ஐபிஎல் விதிமுறை

ஐபிஎல் விதிப்படி 2வது முறையாக இதே தவறை மீண்டும் செய்தால் அணியின் கேப்டனுக்கு ரூ.24 லட்சம், அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25% அல்லது ரூ.6 லட்சம் ( குறைவான தொகை) அபராதம் விதிக்கப்படும். இந்த தவறு 3வது முறையாக நடந்தால் அணி கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் ஆடவும் தடை விதிக்கப்படும். அதே போல அணி வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் 50% தொகை அல்லது ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Story first published: Thursday, April 22, 2021, 13:06 [IST]
Other articles published on Apr 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+