Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்னானே புரியல.. சிஎஸ்கேவுக்கு எதிராக தோல்வி.. விரக்தியின் உச்சத்தில் கொல்கத்தா கேப்டன்!

மும்பை: சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

Recommended Video

CSK-விடம் தோல்வி..Eoin Morgan விரக்தி பேச்சு! | IPL T20 | CSK VS KKR | Oneindia Tamil

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி முதலில் மிக மோசமாக தடுமாறிய நிலையில் வெற்றி இலக்கிற்கு மிக அருகில் வந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

இலக்கு

இலக்கு

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் டுப்ள்சிஸ் அதிரடி காட்டினர். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ரன் சேர்க்கசென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது. டுப்ளசிஸ் 95 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இந்த நிலையில் ஆண்ட்ரே ரசல் - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். மறுபுறம் ஆண்ட்ரே ரசல் சிக்ஸர் மழையுடன் 22 பந்துகளில் 54 ரன்களை குவித்து அவுட்டானார். பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் கடுமையாக போராடி 66 ரன்கள் விளாசினார். எனினும் அந்த அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், இது என்ன மாதிரியான கேம் என்றே தெரியவில்லை. நாங்கள் பவர் ப்ளேவின் போது மிக மோசமான நிலையில் இருந்தோம் ஆனால் இலக்கிற்கு இவ்வளவு அருகில் வருவோம் என நினைத்து பார்க்கவே இல்லை. முதல் 4 ஓவர்களில் எங்களின் பேட்டிங் சரியில்லை. முதல் சில ஓவர்களில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நாங்கள் சிறப்பாக ஆடியிருந்தால் நிச்சயம் பலமான நிலையில் வெற்றி பெற்றிருப்போம்

மோர்கன் பாராட்டு

மோர்கன் பாராட்டு

ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் அற்புதமாக விளையாடினர். இந்த களத்தில் ஒருமுறை சரியாக நிலைத்துவிட்டீர்கள் என்றால் அவர்களை நிறுத்துவது கடினம். பேட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடி இறுதி வரை எங்களுக்கு வெற்றி வாய்ப்பை காட்டினார். அணியின் மிடில் ஆர்டரிலும், லோ ஆர்டரிலும் அற்புதமாக சண்டை செய்தனர். டாப் ஆர்டரில் விக்கெட் சரியும் போது மிடில் ஆர்டரில் இருந்து எதிர்பார்ப்பது இதைத்தான் என தெரிவித்தார்.

Story first published: Thursday, April 22, 2021, 9:44 [IST]
Other articles published on Apr 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+