Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய நேரத்தில் இப்படி ஒரு பின்னடைவா.. டெல்லிக்கு எதிரான போட்டி.. முக்கிய வீரர்களை கைவிட்ட கேகேஆர்

சார்ஜா: டெல்லி அணிக்கு எதிரான போட்டியை வெல்வதற்காக பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் இடம்பிடித்திருக்கும் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கலாம். அதே போல ஐபிஎல் 2வது பகுதி ஆட்டத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது கொல்கத்தா அணி. ஏற்கனவே ஆர்சிபி, மும்பை அணிகளை வீழ்த்திய கொல்கத்தா அணி, சிஎஸ்கேவை தோல்வியின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறலாம்.

டெல்லி அணி மாற்றங்கள்

டெல்லி அணி மாற்றங்கள்

இந்த மோதலுக்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது அணியின் ஓப்பனிங் வீரரான பிரித்வி ஷா காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங் களமிறங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அணியில் எந்தவித மாற்றங்களும் இன்றி களமிறங்க திட்டமிட்டுள்ளது.

வலுவான நிலை

வலுவான நிலை

ஓப்பனிங்கில் ஷிகர் மற்றும் ஸ்மித் ஆகிய இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். அதே போல மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பண்ட். பந்துவீச்சை பொறுத்தவரையில் ரபாடா, அஸ்வின், நார்ட்ஜே என அசத்தலான ஃபார்முடன் களமிறங்குகிறது டெல்லி அணி.

டெல்லி அணி

டெல்லி அணி

ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சிம்ரான் ஹெட்மெயர், லலித் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, ஆன்ரிச் நார்ட்ஜே, ஆவேஷ் கான்

கேகேஆர் பின்னடைவு

கேகேஆர் பின்னடைவு

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது கொல்கத்தா அணியின் ஆணி வேராக பார்க்கப்படும் ஆண்ட்ரே ரஸல் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி சேர்க்கப்பட்டிருக்கிறார். இதே போல கடந்த சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வந்த பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

கேகேஆர் ப்ளேயிங் 11

கேகேஆர் ப்ளேயிங் 11

சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், லாக்கி ஃபெர்க்யூசன், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர்.

Story first published: Tuesday, September 28, 2021, 17:37 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+