Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ நீக்கம்.. திடீரென இளம் வீரரை கொண்டு வந்த தோனி.. கொல்கத்தா போட்டியில் மாஸ்டர் ப்ளான்!

அபுதாபி: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் இன்று தோனியின் சிஎஸ்கே மற்றும் இயான் மோர்கனின் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த இரண்டு அணிகளுமே கடந்த 2 போட்டிகளிலும் அபார வெற்றிகளை குவித்து தற்போது சம பலத்துடன் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறும். அதே போல சிஎஸ்கே வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதற்காக சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிராவோ இல்லை

பிராவோ இல்லை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்படும் சாம் கரண் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவருக்காக சீனியர் வீரர் டுவைன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2 போட்டிகளிலுமே டுவைன் பிராவோ பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து பேசிய கேப்டன் தோனி, சிபிஎல் தொடரில் விளையாடிவிட்டு பிராவோ வந்திருப்பதால் அவருக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக உட்காரவைக்கப்பட்டுள்ளார் எனத்தெரிவித்தார்.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

ருத்ராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரண், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஜோஸ் ஹாசல்வுட்

கேகேஆர் மாற்றம்

கேகேஆர் மாற்றம்

சிஎஸ்கே அணியை எதிர்கொள்வதற்காக கொல்கத்தா அணியில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தவில்லை. கடந்த 2 போட்டிகளிலும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர். இதே போல சுப்மன் கில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதே போல பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா, பெர்குயூசன் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பலமாக இருக்கிறது. இதன் காரணமாகவே அணியில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், லாக்கி ஃபெர்குயூசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா

Story first published: Sunday, September 26, 2021, 21:40 [IST]
Other articles published on Sep 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+