Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போ இல்லேன்னா எப்போ? 2022ல... பிசிசிஐயின் உறுதியான முடிவு!

டெல்லி : வரும் 2021 ஐபிஎல்லில் புதிய அணிகளை இணைக்க பிசிசிஐ முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே உள்ள நிலையில் புதிய முடிவுகளை அவசரகதியில் எடுக்க வேண்டாம் என்று தற்போது பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதையடுத்து 2021 ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் 2020 தொடர் கொரோனா வைரஸ் காரணமாக யூஏஇயில் நடந்து முடிந்துள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்று பரபர விறுவிறுவென போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 5வது கோப்பையை வெற்றி பெற்றது. இந்நிலையில் வழக்கம் போல அடுத்த ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ புதிய முடிவு

பிசிசிஐ புதிய முடிவு

இந்த தொடரில் மேலும் ஒன்றிரண்டு அணிகளை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் துவங்க இன்னும் ஏறக்குறைய மூன்றரை மாதங்களே உள்ள நிலையில், அவசரகதியில் புதிய அணிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

பொதுக்கூட்டத்தில் முடிவு

பொதுக்கூட்டத்தில் முடிவு

இதையடுத்து வரும் 2022ல் புதிய அணிகளை ஐபிஎல்லில் இணைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே உள்ள 8 அணிகளே வரும் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இதுகுறித்த இறுதி முடிவு வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நேரம் சேமிக்கப்படும்

நேரம் சேமிக்கப்படும்

இந்த பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் அணிகள் சேர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக முன்னதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்ட நலையில், தற்போது இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக ஏலத்தை நடத்த வேண்டியதில்லை என்றும் அதிகமான நேரம் சேமிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, December 21, 2020, 17:35 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+