For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2021: சென்னை vs மும்பை போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? - முழு விவரம் இங்கே

துபாய்: ஐபிஎல் 2021 தொடரில் சென்னை vs மும்பை அணிகள் இடையேயான போட்டி குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

Recommended Video

IPL 2021: Points Table நிலவரம்! Playoffs Chance யாருக்கு? | OneIndia Tamil

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக, அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த சீஸனின் இரண்டாம் பகுதி அங்கு நடத்தப்படுகிறது.

இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

 IPL 2021 MI vs CSK LIVE Match When and Where to Watch

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் இப்போது அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. தற்போது சிஎஸ்கே 10 புள்ளிகள் வைத்திருக்கிறது. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன.

இந்நிலையில், சென்னை vs மும்பை போட்டி குறித்த முழு தகவல்களை இங்கே காணலாம்.

செப்.19ம் தேதி, இந்திய நேரப்படி இரண்டு 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சென்னை அணியில் காயம் காரணமாக டு பிளசிஸ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல், குவாரண்டைனில் இருக்கும் சாம் கர்ரனும் இப்போட்டியில் விளையாட மாட்டார். எனவே சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (c & wk), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ங்கிடி, ஜே ஹேசில்வுட் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது.

 IPL 2021 MI vs CSK LIVE Match When and Where to Watch

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மா (c), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல்/ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஐபிஎல் 2021 தொடரை ஸ்டார் இந்தியா நெட்வொர்க் சேனல்களில் 8 மொழிகளில் நேரலையில் கண்டு மகிழலாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர, தமிழ், தெலுங்கு உட்பட 6 பிராந்திய மொழிகளில் போட்டிகள் ஒளிபரப்பப்படும். ஐபிஎல் 2021 இன் அனைத்து போட்டிகளும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்டார் வீடியோவில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஆனால் அதற்காக, ஐபிஎல் ரசிகர்கள் ஆண்டு அல்லது மாதாந்திர சந்தாவை தேர்வு செய்ய வேண்டும். இலவசமாக காண முடியாது.

Story first published: Friday, September 17, 2021, 21:01 [IST]
Other articles published on Sep 17, 2021
English summary
IPL 2021 MI vs CSK - ஐபிஎல் 2021 சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+