Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘மறக்க முடியாத நாள்’.. மொயின் அலியின் பயணத்தில் அஜித் ஏற்படுத்திய தாக்கம்.. அவ்வளவு சுவாரஸ்யமாம்!

சார்ஜா: தனது கிரிக்கெட் வாழ்கையில் மறக்க முடியாத சம்பவத்திற்கு அஜித் ஒரு காரணமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்து வருபவர் மொயின் அலி. இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சூழலில் தான் நேற்று அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

மொயின் அலி ஓய்வு

மொயின் அலி ஓய்வு

அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 34 வயதாகும் மொயின் அலி இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை காலமும் தன்னால் முடிந்தவரை அனுபவித்து விளையாடிவிட்டதாக தெரிவித்தார்.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

மேலும் இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில மாதங்களாகவே பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கிரிக்கெட் விளையாடி வருவதாகவும் அடுத்து டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவிருப்பதாகவும். இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. மனஅழுத்தமும் அதிகமாகி வரும் காரணத்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் வெளியேறுவதாக அறிவித்ததாக தெரிவித்தார்.

மறக்க முடியாத நிகழ்வு

மறக்க முடியாத நிகழ்வு

இந்நிலையில் தனது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத 2 தருணங்களை மொயின் அலி பகிர்ந்துக்கொண்டார். அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியா - இங்கிலாந்து அணிகள் சென்னையில் ஒரு முறை டெஸ்ட் போட்டியில் மோதியது. அப்போது நான் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றுக்கொண்டிருந்த போது, என்னை அழைத்த ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் எப்போது எனக்கேட்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பிறகு தான் அஜித் குறித்து தெரியவந்தது. இது மறக்கவே முடியாது எனக்கூறியுள்ளார்.

அஸ்வினிடம் கேள்வி

அஸ்வினிடம் கேள்வி

மொயின் அலி கூறிய இந்த சம்பவம் இணையத்தில் படு வைரல் ஆகியிருந்தது. இதுகுறித்து பேசியிருந்த தமிழக வீரர் அஸ்வின், என்னிடம் கூட அஜித்தின் வலிமை அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அப்போது மொயின் என்னிடம் வந்து வலிமை என்றால் என்ன? எது குறித்து கேட்கிறார்கள் என வினவினார். அதற்கு விளக்கம் கொடுத்தேன் என தெரிவித்திருந்தார். இது தற்போது அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, September 28, 2021, 14:43 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+