Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஸ்க் எடுத்து அனுப்பிய தோனி.. பிளானை கச்சிதமாக அரங்கேற்றிய மூத்த வீரர்.. களத்தில் நடந்தது என்ன?

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி அமைத்த வியூகத்தை சரியாக செயல்படுத்தி கொடுத்துள்ளார் மொயின் அலி.

டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியில் தொடக்கமே 2 விக்கெட்கள் இழந்து அதிர்ச்சியளித்தது.

சென்னை அணி திணறல்

சென்னை அணி திணறல்

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்களுக்கும், டுப்ளசிஸ் டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சியளித்தனர். முதல் 3 ஓவர்களுக்குள் சென்னை அணி 2 விக்கெட்களை இழந்து திணறியது.

அதிரடி

அதிரடி

இதனையடுத்து களமிறங்கிய மொயின் அலி - சுரேஷ் ரெய்னா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுரெஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் அதிரடி மன்னன் என்பது அனைவருக்கும் தெரிந்ததேன். ஆனால் சிஎஸ்கேவுக்காக முதல் போட்டியில் ஆடிய மொயின் அலி அதிரடி காட்டி ஆச்சரியம் அளித்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், 36 ரன்களை விளாசினார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.

பலன் கொடுத்தது நம்பிக்கை

பலன் கொடுத்தது நம்பிக்கை

மொயின் அலியை நம்பி தோனி வாய்ப்பு கொடுத்தது பேசுப்பொருளானது. ஏனென்றால் சென்னை அணியின் மிகமுக்கிய ஸ்பின்னரான இம்ரான் தாஹீருக்கு பதிலாக தான் மொயின் அலி சேர்க்கப்பட்டார். மொயின் அலி ஆல் ரவுண்டர் என்பதால் பேட்டிங்கிலும் உதவுவார். ஆனால் தாஹீர் ஆல்ரவுண்டர் கிடையாது. இதனால் தோனி மொயின் அலியை நம்பி ரிஸ்க் எடுத்தார்.

தாஹீர் வாய்ப்பு?

தாஹீர் வாய்ப்பு?

தோனி கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதால், மொயின் அலிக்கு இனி அடுத்து வரும் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை பிட்ச்சானது ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் உதவாது. அடுத்த சில போட்டிகளும் மும்பையில் தான் நடக்கும் என்பதால் இம்ரான் தாஹிரின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Saturday, April 10, 2021, 21:56 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+