For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு சிம்பிள் விஷயம்தான்.. ருத்ராஜின் அதிரடிக்கு பின்னர் மறைந்திருக்கும் தோனியின் மந்திரம்.. விவரம்!

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான த்ரில் வெற்றிக்கு பிறகு இளம் வீரருக்கு தோனி ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni தந்த அட்வைஸ்.. CSK-வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள் | Oneindia Tamil

ஐபிஎல்-ல் இறுதி ஓவர் வரை செல்லும் பரபரப்பு போட்டிகளுக்கு பஞ்சமே கிடையாது. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பரபரப்பு கட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுதான் ஒரே வழி.. முக்கியமான நேரத்தில் தோனிக்காக விட்டுக்கொடுத்த ரெய்னா.. அப்படி செய்தது ஏன்?இதுதான் ஒரே வழி.. முக்கியமான நேரத்தில் தோனிக்காக விட்டுக்கொடுத்த ரெய்னா.. அப்படி செய்தது ஏன்?

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

அரை சதம்

அரை சதம்

சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக டுப்ளசிஸ் மற்றும் ருத்ராஜ் கெயிக்வாட்டின் அதிரடி இருந்தது. குறிப்பாக தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் மீண்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும்.

தொடக்கம்

தொடக்கம்

இவரின் அதிரடியால் சென்னை அணி பவர் ப்ளேவில் 54 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய கெயிக்வாட் 64 ரன்கள் அடித்திருந்த போது, பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். 42 பந்துகளை சந்தித்த அவர் 64 ரன்கள் அடித்தார். இதில் 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இவரின் ஆட்டம் குறித்து கேப்டன் தோனி ஸ்பெஷலாக பாராட்டியுள்ளார். ருத்ராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது குறித்து பேசிய அவர், கடந்த ஐபிஎல்-ல் ருத்ராஜ் கிளாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார். அவரின் மனநிலையை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் போட்டியை முடித்து வந்த பிறகு. இன்று எப்படி உணருகிறீர்கள் என கேட்பேன். அதற்கு அவர் அவரிடம் இருந்து வரும் ரியாக்‌ஷனிலும், அவர் கண்களிலும் இருந்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம், அவர் தளர்ந்து போகவில்லை என்று. இந்த மனோத்தத்துவ முறையையே நான் என் வாழ்வில் கடைபிடித்து வருகிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர் விமர்சனங்கள்

தொடர் விமர்சனங்கள்

நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெயிக்வாட்டை அணியில் சேர்க்கவே கூடாது என ரசிகர்களும், வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். ஏனென்றால் இந்த சீசனில் இதற்கு முன்னர் ஆடிய 3 போட்டிகளிலும் ருத்ராஜ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3 போட்டிகளில் 5, 5, 10 என்ற ரன்களே எடுத்திருந்தார். இதனால் சென்னை அணியின் ஓப்பனிங் தடுமாறியது. ஆனால் தோனி தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 22, 2021, 12:01 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
MS Dhoni Revealed the psychology he applied to assess Ruturaj's mentality ahead of KKR game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X