Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டெழுந்த சிஎஸ்கே.. சீனியர் வீரர்களிடம் கெத்து காட்டிய ருத்ராஜ்.. மும்பைக்கு சவாலான இலக்கு!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகு நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது.

Recommended Video

ஏமாற்றிய சீனியர் வீரர்கள்.. தனி ஒருவனாக Mumbai-ஐ மிரட்டிய Ruturaj Gaikwad

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 5வது பந்திலேயே ஓப்பனிங் வீரர் பாஃப் டூப்ளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மொயின் அலி முதல் 3 பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு பின்னர், 4வது பந்தில் அவசரப்பட்டு பவுண்டரி அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார்.

2 டக் அவுட்கள்

2 டக் அவுட்கள்

முதல் 2 ஓவர்களில் 2 டக் அவுட்களை சிஎஸ்கே அணி சந்தித்திருந்ததால் சுரேஷ் ரெய்னா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற ரெய்னா 4 ரன்களுக்கு கேட்ச்சானார். இக்கட்டான சூழலில் சிக்கியிருந்த அணியை மீட்க நேரடியாக கேப்டன் தோனியே 3வது விக்கெட்டிற்கு களமிறங்கியது. வழக்கமாக 7வது வீரராக களமிறங்கும் தோனி இந்த முறை முன்கூட்டியே இறங்கியது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால் தோனியிம் ஏமாற்றத்தையே கொடுத்தார். ஆடம் மில்ன் வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆடிய அவர் 3 ரன்களுக்கு கேட்ச் அவுட்டானார்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதுவும் 4 முக்கிய வீரர்கள் ஆகும். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ருத்ராஜ் ஒருபுறம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதனால் மும்பை அணிக்கு தலைவலியை ஏற்பட்டது. அவருக்கு ஏற்றார் போல ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

கடைசி 2 ஒவர்கள்

கடைசி 2 ஒவர்கள்

இதனால் அந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த டுவைன் பிராவோ கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 8 பந்துகளில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி 23 ரன்களை சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை சேர்த்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருத்ராஜ் கெயிக்வாட் 88 ரன்கள் அடித்து அசத்தினார்.

Story first published: Sunday, September 19, 2021, 21:55 [IST]
Other articles published on Sep 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+