Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷின் மண்டையை உடைக்க பார்த்த பண்ட்.. அதிர்ச்சியில் உறைந்த வருண்.. நூலிழையில் தப்பித்த வீடியோ!

சார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கின் மண்டையை உடைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வரும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சரணடைந்தது.

டெல்லியின் ஓப்பனிங்

டெல்லியின் ஓப்பனிங்

ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த சூழலில், தவறான ஷாட்டால் அவுட்டாகி வெளியேறினார். 20 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் 5 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். சுனில் நரேன் வீசிய பந்தில் போல்ட் அவுட்டானார்.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

இதன் பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ தவிர வேறு எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை. ஹெட்மெயர் (4), லலித் யாதவ் (0), அக்‌ஷர் படேல் (0), ரவிச்சந்திரன் அஸ்வின் (9), ஆவேஷ் ஐயர் (5) என அடுத்தடுத்து அனைவரும் வெளியேறினர். இறுதிவரை போராடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 39 ரன்களை எடுத்து அவுட்டானார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.

பண்ட்-கான திட்டம்

பண்ட்-கான திட்டம்

இந்நிலையில் டெல்லி அணியின் பேட்டிங்கின் போது, அசம்பாவித சம்பவம் ஒன்று நடைபெறவிருந்தது. ஆட்டத்தின் 17வது ஓவரின் போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்துக் கொண்டிருக்க, வருண் சக்கரவர்த்தி பந்துவீசினார். வழக்கமாக வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கின் போது தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று அறிவுரை கூறி வருவார். அந்தவகையில் இன்று ஸ்டம்பிற்கு சற்று அருகில் வந்து நின்று ரிஷப் பண்ட்- ஐ அவுட்டாக்க நினைத்தார்.

பண்ட்-ன் செயல்

வருண் சக்கரவர்த்தி கீழாக போட்ட அந்த பந்தை ஓங்கி அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், பந்தை தொடக்கூட முடியாமல் தவறவிட்டார். எனவே தவறிய பந்தை மீண்டும் அடிப்பதாக விளையாட்டுத் தனமாக பேட்டை சுழற்ற, அது பின்னால் நின்றுக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ஹெல்மட்டை பதம் பார்த்திருக்கும். நூலிழையில் தினேஷ் கார்த்திக் அங்கு தப்பித்தார்.

 வருண் அதிர்ச்சி

வருண் அதிர்ச்சி

இதனை பார்த்த வருண் சக்கரவர்த்தி ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றார். கொஞ்சம் விட்டிருந்தால் தினேஷ் கார்த்திக்கின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, September 28, 2021, 22:20 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+