Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெனச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு... விரக்தியில் பிசிசிஐ... எடுத்த அவசர முடிவு!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை பிசிசிஐ தலைவர் ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார்.

Recommended Video

திடீரென நிறுத்தப்பட்ட IPL 2021.. நடந்தது என்ன? - முழு விபரம்

ஐபிஎல் நிர்வாகக்குழு மற்றும் பிசிசிஐ உறுப்பினர்கள் இடையில் இன்று நடத்தப்பட்ட அவசரக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுளள்து.

ஐபிஎல்லில் பங்குபெற்றிருந்த அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஐபிஎல் 2021 தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 29 போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், நான்கு அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பை அடுத்து இந்த தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கேகேஆர், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற அணிகளை சேர்ந்த வீரர்களுக்கும் தொடர்ந்து கொரோனா டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

இதையடுத்து இன்று காலை ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.

மகிழ்ச்சியாக இருங்கள்

மகிழ்ச்சியாக இருங்கள்

இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு பாசிட்டிவிட்டியையும் மகிழ்ச்சியையும் அளிக்க விரும்பினோம். ஆனால் அது தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள் என்றும் அந்த அறிக்கையில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ உறுதி

பிசிசிஐ உறுதி

ஐபிஎல் 2021 தொடரில் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அனைத்துவிதமான நடவடிக்கையையும் பிசிசிஐ மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய, வீரர்கள், அணிகள், ஸ்பான்சர்ஸ், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கும் பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, May 4, 2021, 18:12 [IST]
Other articles published on May 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+