Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'என்ன மனுஷயன்யா'.. சம்பளத்தின் ஒரு பகுதி இந்திய மக்களுக்காக... வாரி வழங்கிய பஞ்சாப் வீரர்!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் அந்த அணியின் வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செய்துள்ள உதவி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Recommended Video

Nicholas Pooran, Punjab Kings கொடுக்கும் Corona donation | OneIndia Tamil

கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளொன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தட்டுபாடு

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் வாங்கப்பட்டு வருகிறது. அதற்காக கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல்-ல் பஞ்சாப் அணிக்காக் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரண ஐபிஎல்-ல் தான் பெரும் ஊதியத்தின் ஒரு பகுதியை கொரோனாவை எதிர்த்து போராட கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

நிக்கோலஸ் பூரண்

நிக்கோலஸ் பூரண்

இதுகுறித்து தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பல்வேறு நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளது. எனினும் இந்தியாவில் தற்போது இருக்கும் நிலைமை மிக மோசமாக உள்ளது. இதனை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த மக்களுக்காக நானும் சக வீரர்களும் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை மேற்கொள்ளவுள்ளோம்.

கோரிக்கை

கோரிக்கை

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர் என்றால் தயவு செய்து போட்டுக்கொள்ளுங்கள். நான் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். அது மட்டுமல்லாமல் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு எனது ஐபிஎல் ஊதியத்தின் ஒரு பகுதியை கொடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

இதே போல நிகோலஸ் பூரண் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த அணி, ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் கைக்கோர்த்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 30, 2021, 17:44 [IST]
Other articles published on Apr 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+