Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த அசிங்கம் தேவையா? ஆர்சிபியை ட்ரோல் செய்து மொக்கை வாங்கிய ராஜஸ்தான் அணி...மாஸ் காட்டிய ஆர்சிபி!

சென்னை: ஆர்.சி.பி - சி.எஸ்.கே அணியின் ட்விட்டர் பிரச்னைக்குள் வந்த ராஜஸ்தான் அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது ஆர்.சி.பி அணி.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்காக ஆர்.சி.பி அணிக்கு ட்விட்டர் நிறுவனம் செய்த எமோஜியில் பிழை இருந்ததால் ஆர்.சி.பி அணியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ட்விட்டரின் தவறு

இந்தாண்டு ஐபிஎல் கொண்டாட்டத்தை சிறப்பாக்கும் வகையில் ஒவ்வொரு அணிகளின் ஹேஷ்டேக்குகள் பக்கத்தில் அந்த அணியின் ஜெர்ஸி எமோஜியை ட்விட்டர் நிறுவனம் நேற்று வெளியிட்டது. ஆனால் அதில்தான் ஆர்.சி.பி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்.சி.பி அணியின் 3 ஹேஷ்டேக்குகளான #RCB, #PlayBold and #WeAreChallengers ஆகியவைக்கு பக்கத்தில் அந்த அணியின் ஜெர்ஸி எமோஜிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி எமோஜி தோன்றியது.

பெங்களூரு அணி ட்ரோல்

இதுகுறித்து ரியாக்ட் செய்த பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டர் நிறுவனத்திற்கு சிறந்த தொழில்நுட்ப பொறியாளர் தேவைப்படுவது போல் தெரிகிறது. சிறந்த பொறியாளரை வேலைக்கு எடுக்க பெங்களூரு சிறந்த நகரம் என தெரிவித்துள்ளது. மேலும் #WhatswithyourEmojis என்ற ஹேஷ்டேக்கையும் போட்டு கிண்டலடித்துள்ளது.

ராஜஸ்தான் கிண்டல்

இந்த எமோஜி பிரச்னை குறித்து ரியாக்ட் செய்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, படையப்பா திரைப்படத்தில் வரும் காட்சியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. சி.எஸ்.கே இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட அணி என்பதால் ரியாக்ட் செய்திருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணி சம்பந்தமே இல்லாமல் ஆர்.சி.பி அணியை கிண்டல் செய்வதற்காக ஒரு ஆணின் முகத்தில் பெண் மஞ்சள் பூசுவது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டது.

ஆர்.சி.பி பதிலடி

ராஜஸ்தான் அணியின் இந்த பதிவை கண்டு ஆத்திரமடைந்த பெங்களூரு அணி ரிப்ளையாக மனித மூக்கின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது. அதாவது இரு அணிகளின் பிரச்னைக்குள் மூக்கை நுழைக்காதீர்கள் என மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது.

Story first published: Sunday, April 4, 2021, 16:58 [IST]
Other articles published on Apr 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+