Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி மாற்றங்கள்.. வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள்.. வெற்றி யாருக்கு?

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது,

இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

நட்சத்திர வீரர்கள் காயத்தால் வெளியேறியதால் தடுமாறி வரும் ராஜஸ்தான் அணி, இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் 2 மாற்றங்கள் அந்த அணியில் செய்யப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ஓப்பனிங் வீரர் மன்னன் வோஹ்ராவுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலும், பவுலிங்கில் ஸ்ரேயாஸ் கோபாலுக்கு பதிலாக உனத்கட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

ஜாஸ் பட்லர், யாஷாஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் தூபே, ரியான் பராக், ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனத்கட், சேட்டன் சகாரியா, முஸ்திவிசூர் ரஹ்மான்,

 கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

ராஜஸ்தான் அணியை போலவே இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. எனவே இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கமலேஷ் நாகர்கோட்டிக்கு பதிலாக ஷிவம் மாவிக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸல், பேட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி, பிரஷித் கிரிஷ்ணா

Story first published: Saturday, April 24, 2021, 19:46 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+