T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை!
அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்ந்தெடுப்பதற்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 2வது பகுதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கள் இன்று தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த முறை அதிகளவில் புதுமுக வீரர்களும் இளம் வீரர்களும் அசத்தி வருகின்றனர். ஆனால் முன்னணி வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை
இதில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது தான், பிசிசிஐ-க்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பெரும் பிரச்னையாக இருக்கிறது,

பிசிசிஐ-க்கு தலைவலி
இது ஒருபுறம் இருக்க, மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் இன்னும் பந்துவீசாமல் இருந்து வருகிறார். பேட்டிங்கிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் உதவுவார், லோயர் ஆர்டரில் இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்பதால் தான் அவரை அணியில் சேர்த்தனர். ஆனால் தற்போது அவர் நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

அவசர ஆலோசனை
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணி குறித்து பிசிசிஐ நாளை உயர்மட்ட ஆலோசனை நடைபெறவிருக்கிறது. இதில் மூன்று முக்கிய மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதாவது முதல் மாற்றமாக ஹர்திக் பாண்ட்யா தான் இருப்பார். அவர் பந்துவீச ஒப்புக்கொள்ளவில்லை என்றால், முழு நேர பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படலாம். அப்படி இல்லையென்றால் ஷர்துல் தாக்கூர் அல்லது தீபக் சஹாரை மெயின் அணிக்குள் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

மற்ற மாற்றங்கள்
இதன் பிறகு சூர்யகுமார் யாதவின் ஃபார்மும் விவாதிக்கப்படவுள்ளது. நடப்பு சீசனில் ஒரு பெரியளவில் அவர் ரன் ஏதும் குவிக்கவில்லை. எனவே அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் மெயின் அணிக்கு கொண்டுவரப்படலாம் அல்லது ஷிகர் தவானை கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. 3வது மாற்றமாக ராகுல் சஹார் மாற்றப்படவிருக்கிறார். சுழற்பந்துவீச்சில் சொதப்பி வரும் ராகுல் சஹாருக்கு பதிலாக யுவேந்திர சாஹலை கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. வரும் அக்டோபர் 10ம் தேதிக்குள் இறதி செய்யப்பட்ட அணி பட்டியலை ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே நிச்சயம் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications