Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்?.. இன்று வாழ்வா? சாவா? ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..

சார்ஜா: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டி தான் ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள கெடு என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 35வது லீக் ஆட்டத்தில் இன்று தோனியின் சிஎஸ்கே மற்றும் விராட் கோலியின் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.

இந்திய கிரிக்கெட்டின் குரு - சிஷ்யனாக பார்க்கப்படும் இவர்களின் இருவரின் கேப்டன்சியையும் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்தில் இருக்கும் போதிலும், சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறாது. ஏனென்றால் 2வது பாதி தொடரின் முதல் ஆட்டத்திலேயே ஆர்சிபி அணி மோசமான தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான அந்த போட்டியில் 92 ரன்களுக்கு சுருண்டது. கோலி, டிவில்லியர்ஸ் என எந்த வீரராலும் ஸ்கோரை உயர்த்தவில்லை.

 வெற்றி கட்டாயம்

வெற்றி கட்டாயம்

அதே போல கடந்த போட்டியில் கோலியின் கேப்டன்சியும் பெரியளவில் தாக்கத்தை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. அவரின் பவுலிங் திட்டம் கொல்கத்தா அணியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தது. எனவே சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கினால் மட்டுமே வரும் போட்டிகளிலும் நம்பிக்கையுடன் விளையாடி ப்ளே ஆஃப்-க்குள் நுழைய முடியும்.

விராட் கோலிக்கு கெடு

விராட் கோலிக்கு கெடு

இந்நிலையில் சிஎஸ்கே போட்டியில் மட்டும் ஆர்சிபி தோல்வியை சந்தித்தால் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி நிர்வாகிகளுக்கு இடையே பரபரப்பான ஆலோசனைக்கூட்டம் நடந்ததாகவும், அதில் இந்தாண்டு தொடரிலேயே கோலிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

இந்த ஆண்டே Virat Kohli-யிடம் இருந்து Captain பதவியை பறிக்கும் RCB நிர்வாகம் ?
கடைசி போட்டி?

கடைசி போட்டி?

விராட் கோலி ஏற்கனவே இந்தாண்டுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ஆனால் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால், இந்தாண்டே பதவியை இழக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவி விலகுவது புதிதல்ல, ஏற்கனவே கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக், ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 24, 2021, 19:30 [IST]
Other articles published on Sep 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+